காவியுடையைக்கு
அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடும் பெளத்த
பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கும் அதிகாரத்தை மாநாயக்க
தேரர்களுக்கு வழங்கும் முகமாக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக
பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
மாநாயக்க தேரர்கள் பௌத்த மதத்தை மதித்து அதனை ஊக்குவிக்கின்ற போதிலும் காவியுடையை அணிந்துகொண்டு அதனை அவமதிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவோரும் உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
புதிய சட்டத்தின்படி எந்த விகாரையுடனும் தொடர்புபடாதா, முறை தவறி நடக்கும் பௌத்த பிக்குகளின் பட்டத்தை சங்க சபையால் பறிக்கமுடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படாவிடின் விரைவில் பலர் காவியுடை அணிந்து தங்களை பௌத்த பிக்குவாக பிரகடனப்படுத்திக்கொள்ளுவர் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதியாலோ அல்லது வேறு எவறாலோ அப் பட்டத்தைப் பறிக்க முடியாத போதிலும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம் அதனை மகாநாயக்க தேரர்களால் செய்யமுடியுமெனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்
மாநாயக்க தேரர்கள் பௌத்த மதத்தை மதித்து அதனை ஊக்குவிக்கின்ற போதிலும் காவியுடையை அணிந்துகொண்டு அதனை அவமதிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவோரும் உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
புதிய சட்டத்தின்படி எந்த விகாரையுடனும் தொடர்புபடாதா, முறை தவறி நடக்கும் பௌத்த பிக்குகளின் பட்டத்தை சங்க சபையால் பறிக்கமுடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படாவிடின் விரைவில் பலர் காவியுடை அணிந்து தங்களை பௌத்த பிக்குவாக பிரகடனப்படுத்திக்கொள்ளுவர்

0 கருத்துகள்: