மாணவிகள் இருவரை நிர்வாணமாக படம்பிடித்த ஆசிரியர் ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
தம்புத்தேகம பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றைச்சேர்ந்த மாணவிகள் இருவரையே
குறித்த பாடசாலையை சேர்ந்த ஆசிரியர் நிர்வாணமாக படம்பிடித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக
உடற்கூற்று சான்றிதழை பெற்றுகொள்வதற்காக மாணவிகள் இருவரையும் கொழும்புக்கு
அழைத்துவந்த ஆசிரியர் பியகம பகுதியில் வாடகைக்கு அமர்த்திய அறையொன்றில்
வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டே நிர்வாணமாக
படம்பிடித்துக்கொண்டாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில்
பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவரும் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பியகம
பொலிஸார் ஆசிரியரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
0 கருத்துகள்: