காசா
செஞ்சிலுவைச் சங்கத்தில் பணிபுரிந்த பிரித்தானிய பிரஜை குரம் ஷெய்க்
தங்கல்லையில் வைத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தை இழுத்தடித்து வந்த
காவல்துறை ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான தங்கல்ல பிரதேச சபை தலைவர் உட்பட
எட்டுப்பேரை நீதி மன்றில் நிறுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2011 டிசம்பர் மாதம் தனது ரஷ்ய காதலியுடன் இலங்கைக்கு விடுமுறையில்
வந்திருந்த குரம் ஷெய்க் கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டதோடு
துப்பாக்கியாலும் சுடப்பட்டிருந்ததுடன் அவரது காதலி
வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
இதில் கைதான சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டபோதும் பிரத்தானிய
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச நெருக்கடிகள் அதிகரித்து வரும்
நிலையில் அதுவும் பொதுநலவாய மாநாடு நெருங்கி வரும் இவ்வேளையில் “நீதி” யை
நிலைநாட்ட நடவடிக்கையெடுக்கப்படுவதாக அறிவித்தல் வெளியாகியிருக்கின்றமை
குறிப்பிடத்தக்கது.
இதில் கைதான சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டபோதும் பிரத்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் அதுவும் பொதுநலவாய மாநாடு நெருங்கி வரும் இவ்வேளையில் “நீதி” யை நிலைநாட்ட நடவடிக்கையெடுக்கப்படுவதாக அறிவித்தல் வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: