ஐக்கிய
அரபு எமிரேட் அபுதாபியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 56 வயதான இந்தியர்
ஒருவர் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவர் அப்பள்ளியில்
படித்து வரும் 7 வயது சிறுமியை கற்பழித்ததாகவும், கொலை மிரட்டல்
விடுத்ததாகவும் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அச்சிறுமி
கற்பழிக்கப்பட்டது உறுதியானது.இவ்வழக்கு விசாரணை, அபுதாபி குற்றவியல்
கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சய்யீது அப்துல் பசீர் தலைமையில் 3
நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் நேற்று தீர்ப்பு அளித்தது. இந்திய துப்புரவு
தொழிலாளிக்கு மரண தண்டனை விதித்தது. கற்பழிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்,
நஷ்டஈடு கோரி தாக்கல் செய்த மனுவை சிவில் கோர்ட்டுக்கு நீதிபதிகள் அனுப்பி
வைத்தனர்.
புதன், 31 ஜூலை, 2013
0 கருத்துகள்: