இலங்கையில்
செயற்படும் போதைப் பொருள் வர்த்தகத்தை மேற்கொள்ளும் பிரபலமான தரப்பினர்
தொடர்பில் விரைவில் நாட்டிற்கு வெளிப்படுத்தவுள்ளதாக பொதுபல சேனா
அறிவித்துள்ளது.
அந்த இயக்கத்தின் பொது செயலாளர் கலகொட அத்தே
ஞானசார தேரர் கொலன்னாவ நகர மத்தியில் நேற்று இடம்பெற்ற பொதுபல சேனாவின்
பேரவைக் கூட்டத்தின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டார்
நாங்கள் பிரிவினை வாதம் தொடர்பாக பேசும் போது சிலருக்கு வருத்தமாக
இருக்கின்றது. அப்படியான ஒருவர் இந்த பகுதியிலும் இருக்கின்றார். ரேனுக
பெரேரா. கொலன்னாவ போன்ற பகுதியில் இப்படியான அரவாணிகள் பிறக்கின்றார்கள்
என்று நான் எதிர்பார்க்கவில்லை. 13 வது அரசியலமைப்பு திருத்தில் உள்ள
பாதகங்களை நாங்கள் எடுத்துக் கூறினோம். ஆனால் இந்த ரேனுக பெரேரா மாத்திரம்,
கூறுகிறாராம்.. பொதுபல சேனா என்பது காலத்தை வீணடிக்கும் ஒரு தரப்பு என்று.
அதேபோன்று இந்த பகுதியில் இருக்கின்ற பெண் அரசியல்வாதி
கூறுகிறார், பௌத்த பிக்குவே!! விகாரைக்கு சென்று என்னவென்றாலும் செய்து
கொள்ளுங்கள் என்று. அவர் பெயரைக் கூறினாலும் பரவாயில்லை .. அசோகா
லங்காதிலக்க.
யுத்தத்தை பார்க்கிலும் பாரிய அசம்பாவிதங்களை
ஏற்படுத்தும் போதைப்பொருள் பாவனைக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுக்காத
பட்சத்தில் இலங்கை மக்கள் நாளுக்கு நாள் அழிந்து போவதை தவிர்க்க முடியாது.
எனவே, அதில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியில் கொண்டு வர நடவடிக்கை
எடுக்கப்படும்.
கத்தோலிக்க பேராயர், ஜம்மியத்துல் உலமா சபை
ஏன்பனவும் போதைப் பொருளுக்கு எதிராக போராட முன்வர வேண்டும். இதற்கான
அழைப்பை விடுக்கிறோம். அந்தவகையில் அரசியல் தரப்பினரும், பௌத்த பிக்குமாக
அனைவரும் ஒன்றிணைந்து ஒரு கொத்தாக செயற்படவுள்ளதாவும் ஞானசார தேரர்
குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்: