குவைட்டில்
இரண்டாவது பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டின் சிறுபான்மையினரான ஷியா
முஸ்லிம்களின் பாதிக்கும் அதிகமான ஆசனங்கள் பறிபோயுள்ளன. சனிக்கிழமை
இடம்பெற்ற தேர்தலில் ஷியா பிரிவினர் 50 உறுப்பினர்கள் கொண்ட
பாராளுமன்றத்தில் 8 ஆசனங்களையே வென்றனர்.
முன்னதாக டிசம்பரில்
கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் ஷியாக்கள் 17 ஆசனங்களை வென்றிருந்தனர்.
எதிர்க் கட்சிகள் புறக்கணித்த தேர்தலில் 52.5 வீதமானோர்
வாக்களித்திருந்தனர். லிபரல் மற்றும் பழங்குடியினரே அதிக ஆசனங்களை
வென்றனர். குறைபாடுகளை காரணம்
காட்டி குவைட் பாராளுமன்றம் கடந்த டிசம்பரில் கலைக்கப்பட்டது. மன்னராட்சி
நிலவும் குவைட்டில் பாராளுமன்றம் மிகக் குறைந்த அதிகாரம் கொண்ட நிறுவனமாக
செயற்பட்டபோதும் அதனையொட்டி நாட்டில் தொடர்ந்தும் பதற்றம் நீடிக்கிறது.
குவைட் மன்னரின் தேர்தல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து லிபரல்கள்
மற்றும் இஸ்லாமியவாதிகளைக் கொண்ட எதிர்க் கட்சிகள் தேர்தலை
புறக்கணித்திருந்தன. புதிய பாராளும ன்றத்தில் நாட்டின் 30 வீத சனத்தொகை
கொண்ட ஷியாக்களின் பிரதிநிதித்துவம் குறைவடைந்து பெரும்பான்மை சுன்னி
முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரித்துள்ளது.
0 கருத்துகள்: