முஸ்லிம் நாடுகளிலிருந்து எமக்கு கிடைக்கும் கனிய எண்ணெயினூடாகவே பொது பல சேனா அமைப்பினர் சொகுசு கார்களில் பயணிக்கின்றனர். அந்த பெட்ரோல் ஹலாலா என அவர்கள் பார்க்கவில்லை.

முடிந்தால் மத்தியகிழக்கு எரிபொருளை பயன்படுத்தாது அவர்கள் நடந்து செல்லட்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர் நலநோம்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹாலி-எல ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்த பொது பல சேனா போன்ற தேசத்துரோக அமைப்புக்கள் முயற்சிக்கின்றன. இவ்வாறான நேரத்தில் நாம் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து இனங்கள் தொடர்பிலும் குரல் கொடுக்கிறோம். இதனை பொறுக்கமுடியாத பொது பல சேனா டிலானுக்கு பைத்தியம் என்கின்றனர்.

நாட்டில் இனவாத தீயை மூட்டி அதில் குளிர்காய்வதை விட பைத்தியக்காரனாக இருப்பது சிறந்தது. இனவாதம், மதவாதம் ஊடாக வீரனாக வேண்டிய அவசியம் எனக்கில்லை.

கடந்த காலங்களில் ஹலால் தொடர்பில் அவர்கள் பிரச்சினை செய்தார்கள். அதன் பலனாக சிங்கள முஸ்லிம் உறவு மேலும் வலுப் பெற்றது. முஸ்லிம்கள் எப்பொழுதும் சிங்களவர்களுடன் சகோதரத்துவத்துடனேயே பழகுகின்றனர்.

ஹாலி-எல வை ஒரு போதும் மத, இனவாதங்களால் பிரிக்க முடியாது. பொது பல சேனா இனவாதத்தை விதைக்க ஹாலி-எல விற்கு முடிந்தால் வரட்டும். அவ்வாறு வருகை தந்தால் அன்று அவர்கள் எனது மக்களின் பலத்தை கண்டுகொள்வார்கள்.

நாம் அதிகமாக கேட்கும் 'புத்தங் சரணம்' என்ற பாடலை பாடியது முஹிதீன் பேக் என்ற முஸ்லிம். அவர் எமது தேசிய பாடகர். அங்கு இன வேறு பாடு இருக்கவில்லை.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையில் இலங்கையின் பக்கம் இருந்ததும் முஸ்லிம் நாடுகளே. அத்துடன் எமது நாட்டின் வருமானத்தின் பிரதான பங்கும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்பவர்களாலேயே கிடைக்கின்றது. இவற்றை நாம் ஒரு போதும் மறந்து செயற்படப்போவதில்லை.

பெளத்தர்களை மதவாத்தின்பால் தூண்டி, இனக்குரோதத்தை வளர்க்காமல் நாமனைவரும் இலங்கையர்கள் என்பதை வளர்க்குமாறு நான் பொது பல சேனாவுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

முஸ்லிம் நாடுகளிலிருந்து எமக்கு கிடைக்கும் கனிய எண்ணெயினூடாகவே பொது பல சேனா அமைப்பினர் சொகுசு கார்களில் பயணிக்கின்றனர். அந்த பெட்ரோல் ஹலாலா என அவர்கள் பார்க்கவில்லை.

முடிந்தால் மத்தியகிழக்கு எரிபொருளை பயன்படுத்தாது அவர்கள் நடந்து செல்லட்டும் . அதனாலேயே இந்த இனவாதிகளால் மக்களை ஏமாற்ற முடியாது என நாம் கூறுகிறோம். இறுதியில் இந்த இனவாதிகள் ராஜ சுகம் அனுபவிப்பது மட்டுமே எஞ்சும். அதற்காக அவர்கள் மக்களை மூளை சலவை செய்கின்றனர் என தெரிவித்தார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts