ரமழான் பண்டிகையைக் கொண்டாட தயாராகுபவர்களுக்கு வீடியோவில்
தனது நாய்களுடன் அமர்ந்தவாறு வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்த பெண்
ஒருவரை மலேசியப் பொலிஸார் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
நாய்களுக்கு பயிற்சி அளிப்பவரான மஸ்னஹ் யுஸொப் என்ற மேற்படி பெண் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளதை வெளிப்படுத்தும் ஒலி பின்னணியில் ஒலிக்க தனது 3 நாய்களுக்கு உணவு ஊட்டுவதை மேற்படி வீடியோக் காட்சி பிரதிபலிக்கிறது.
இஸ்லாமிய மதத்தைப் பொறுத்தவரை நாய்கள் அசுத்தமான உயிரினங்களாக கருதப்படுகின்றன.
இது தொடர்பில் மஸ்னஹ் (38 வயது) விபரிக்கையில், தான் இஸ்லாத்தை அவதூறு செய்யும் நோக்கில் அந்த வீடியோக் காட்சியை வெளியிடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
‘‘நான் எனது மதத்தை நேசிக்கிறேன். எனது மதம் சுத்தத்தின் அவசியத்தை எனக்கு போதித்துள்ளது’’ என அவர் கூறினார்.

0 கருத்துகள்: