1300 ஆண்டுகளாக இருந்த வந்துள்ள சிங்களம் மற்றும் முஸ்லிம் இன நல்லுறவை சீர்குலைக்க பெரும்பான்மை சமூகத்தவர்களில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான குழு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் முஸ்லிம் விரோத வெறுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.திருகோணமலையில் கிழக்கு மாகாண முதலமைச்சுச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிண்ணியா ஜம்இய்யத் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் மற்றும் சபையின் நிருவாக சபை உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அங்கு முதலமைச்சர் தெரிவித்ததாவது:-

"இந்த நாட்டில் 1300 ஆண்டுகளாக இருந்த வந்துள்ள சிங்களம் மற்றும் முஸ்லிம் இன நல்லுறவை சீர்குலைக்க பெரும்பான்மை சமூகத்தவர்களில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான பேரினவாதக்குழுக்களால் திட்டமிடப்பட்டு முஸ்லிம் விரோதச் செயல்கள் நடத்தப்படுகின்றன.

இதனை வழிநடத்தும் சில வெளிநாட்டு முஸ்லிம் விரோத சக்திகள் அக்குழுக்களுக்கு பணத்தை வழங்கி மீண்டும் பயங்கரவாதச் சூழ்நிலையை ஏற்படுத்த முனைகின்றன. இது குறித்து முஸ்லிம் மக்கள் எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் நடந்து கொள்வதோடு ஐவேளைத்தொழுகையில் ஈடுபட்டு பாதுகாப்பு வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்.

மக்களை அமைதி காக்கும்படி உலமா சபையினரும் கோரவேண்டும். சுதந்திர தினத்தில் கலந்து கொள்ள திருமலை வந்திருந்த ஜனாதிபதியிடம் இவ்விடயம் தொடர்பாக நான் நீண்ட உரையாடினேன். ஜனாதிபதி அப்போது மிகத்தெளிவாக நாடு எல்லார்க்கும் சொந்தமானது. எவரும் அச்சப்படத்தேவையில்லை.

குறிப்பாக முஸ்லிம் மக்களையும் பள்ளிவாயல்களையும் பாதுகாப்பு எனது கடமையாகும் என்று என்னிடம் உறுதியாகச் சொன்னார். ஒற்றுமைக்கு உதாரணமாக மூன்று இன மக்களும் வாழுகின்ற திருகோணமலை மாவட்டத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்" என்றார்.
1300 ஆண்டு கால உறவை சீர்குலைக்க முயற்சி: கிழக்கு முதலமைச்சர்

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய

Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts