ஓகே ! எல்லாம் முடிந்து விட்டது என்று ஓரளவு பெருமூச்சு விடலாம். ஆனால் அதை அவசரப்பட்டு முடிவெடுக்கலாமா என்றுதான் தெரியவில்லை.

இலங்கையில் முஸ்லிம்கள் உண்ணும் உணவுக்காகத்தான் ஹலால் சான்றிதழ் இப்போது உங்களுக்கு திருப்தி தானே தேரர்களே என்று கேட்காத குறையாக ஊடகங்கள் முன்னிலையில் தானே நேரடியாகப் பேசி சர்ச்சைக்குரிய விடயத்துக்கு ஒரு முடிவு கண்டுள்ளார் ரிஸ்வி முப்தி. இது எப்போதோ நடந்திருக்க வேண்டும் ஆனால் இப்போதாவது நடந்ததே என்பது ஆறுதல்.

ஹலால் சான்றிதழ் இல்லாததால் நீங்கள் தான் பாதிக்கப்படப்போகிறீர்கள் முஸ்லிம் அல்லாத உற்பத்தியாளர்களே என்று சொல்லாமல் அவர் சொன்ன விடயம் மூளைக்குப் பட்டு அதை வைத்து சர்ச்சைகளை உருவாக்க சிங்களப் பேரினவாதிகளுக்கு கால அவகாசம் தேவையில்லை என்றாலும் திட்டமிட்டு மேலிடம் சொல்லும் வரை அவர்கள் காத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

உண்மையில் அவ்வாறு ஹலால் சான்றிதழ் பெறுவதன் பயன் உணர்ந்த ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் இது தொடர்பில் அலட்டிக்கொள்ளப் போவதில்லை ஏனெனில் வியாபார நோக்கத்திற்காக அவர்கள் தொடர்ந்தும் எப்படியாவது அந்தச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளத்தான் போகிறார்கள்.

சர்ச்சைக்குரியவர்களும், ஹலால் சான்றிதழ் தேவையில்லாதவர்களும் அல்லாஹ்வுடைய காவல் இனிமேல் வராதீர்கள் என்பதுதான் நேரடி “மெசேஜ்”.

ஆனாலும் இது முடிவாக இருக்குமா என்பது சந்தேகமே? ஏனெனில் ஹலால் விடயம் தானா பெளத்த பேரினவாதத்தின் நோக்கம் என்று ஆராயும் போது அது இதையும் தாண்டியது என்பது அவர்களது அண்மைய பேச்சுக்களிலிருந்து புலப்படுவதும் அதே வேளை தொடர்ந்து ஜம் இயத்துல் உலமாவும் இலங்கை முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் தாம் தான் என ஊடகங்களில் கூறி வருவதும் சிந்திக்க வேண்டிய விடயங்கள்.

அரசியலிலும் இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சக்தியாக ஜம் இயத்துல் உலமா பார்க்கப்பட ஆரம்பித்துள்ளதால் அல்லது அப்படியான தோற்றப்பாட்டை ஜம் இயத்துல் உலமாவும் விரும்பியே உருவாக்கியிருந்தால் ? இனி வரும் காலம் ஜம் இயத்துல் உலமாவிற்கு மேலும் நெருக்கடியான காலமாகவே மாறும் என்பது கசப்பான உண்மை.

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் !
ஹலால் : ரிஸ்வி முப்தி முடித்து வைத்தார் ?

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய

Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts