ஹலால்
விடயத்திலிருந்து தற்போது புர்கா விடயத்திற்குத் தாவியுள்ள பொதுபல சேனா
முஸ்லிம்களின் அனைத்து விடயங்களிலும் தலையிடுவதாக அ.இ.ஜ.உ ஊடக
ஒருங்கிணைப்பாளர் நேற்றைய தினம் அரசியல் களம் நிகழ்ச்சியில் கருத்து
வெளியிட்ட நிலையில் புர்கா, நிகாப் அணிவது முஸ்லிம் பெண்களின் உரிமை என்பதை
ஏற்றுக்கொண்டார் பொதுபல சேனவின் செயலாளர் அத்தே ஞானசேர தேரர்.
ஒரு நாட்டின் பிரஜைக்கு தான் விரும்பும் வகையில் ஆடை அணியவும், உண்ணவும்,
வாழவும் உரிமையிருக்கிறது. இன்றைய நிலையில் நவீன நாகரீக ஆடைகளைப் பலரும்
அணிகிறார்கள். உதாரணமாக மெஜஸ்டிக் சிடி, லிபர்டி ப்ளாசா, காலி வீதி முதல்
நுவரெலிய வரை பெண்கள் தாங்கள் விரும்பும் குட்டைப் பாவாடைகளையும்
அணிகிறார்கள். அதே போல கடலோரப்பகுதிகளில் விரும்பிய பெண்கள் “பிகினி”
ஆடையிலும் காணப்படுகிறார்கள், இது அவர்களது உரிமையெனக் கொள்வின், புர்கா
அணிய விரும்பும் முஸ்லிம் பெண்கள் தங்கள் உடலை வெளியுலகுக்குக் காட்டத்
தேவையில்லை, தனது ஆடவருக்கு மட்டுமே காட்டினால் போதும் எனத் தானாக விரும்பி
அதை அணிந்தால் அதை எப்படித் தடை செய்யக் கோருவது? அது ஒரு அடிப்படை உரிமை
மீறல் இல்லையா? என ஊடகவியலாளர் இர்பான் இக்பால் கேட்ட கேள்விக்குப்
பதிலளித்த அத்தே ஞானசேர தேரர் ” ஆம் நீங்கள் கூறுவது சரி, நாங்கள் அந்த
விடயத்தை அவ்வளவு பெரிது படுத்தவில்லை ” எனத் தெரிவித்தார்.
எனினும் தாம் முஸ்லிம் விரோத இயக்கமல்ல என்று கூறிக்கொண்ட அவர் ஹலால்
விடயத்தில் தாம் ஹலால் சான்றிதழ் வழங்கப்படும் முறையையே எதிர்ப்பதாகக்
கூறிய நிலையில் நாளைய தினம் அரச அனுசரணையில் இது தொடர்பாக ஆராய்ந்து
முடிவெடுக்கும் கூட்டம் இடம்பெறப்போவதாக அறிவித்தல்கள்
வெளியாகியிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஞானசாரருடனான உரையின் பகுதி எமக்குக் கிடைக்கப்பெற்றதும் அதனை இங்கே இணைத்துக்கொள்கிறோம்.
ஹலால்
விடயத்திலிருந்து தற்போது புர்கா விடயத்திற்குத் தாவியுள்ள பொதுபல சேனா
முஸ்லிம்களின் அனைத்து விடயங்களிலும் தலையிடுவதாக அ.இ.ஜ.உ ஊடக
ஒருங்கிணைப்பாளர் நேற்றைய தினம் அரசியல் களம் நிகழ்ச்சியில் கருத்து
வெளியிட்ட நிலையில் புர்கா, நிகாப் அணிவது முஸ்லிம் பெண்களின் உரிமை என்பதை
ஏற்றுக்கொண்டார் பொதுபல சேனவின் செயலாளர் அத்தே ஞானசேர தேரர்.
ஒரு நாட்டின் பிரஜைக்கு தான் விரும்பும் வகையில் ஆடை அணியவும், உண்ணவும், வாழவும் உரிமையிருக்கிறது. இன்றைய நிலையில் நவீன நாகரீக ஆடைகளைப் பலரும் அணிகிறார்கள். உதாரணமாக மெஜஸ்டிக் சிடி, லிபர்டி ப்ளாசா, காலி வீதி முதல் நுவரெலிய வரை பெண்கள் தாங்கள் விரும்பும் குட்டைப் பாவாடைகளையும் அணிகிறார்கள். அதே போல கடலோரப்பகுதிகளில் விரும்பிய பெண்கள் “பிகினி” ஆடையிலும் காணப்படுகிறார்கள், இது அவர்களது உரிமையெனக் கொள்வின், புர்கா அணிய விரும்பும் முஸ்லிம் பெண்கள் தங்கள் உடலை வெளியுலகுக்குக் காட்டத் தேவையில்லை, தனது ஆடவருக்கு மட்டுமே காட்டினால் போதும் எனத் தானாக விரும்பி அதை அணிந்தால் அதை எப்படித் தடை செய்யக் கோருவது? அது ஒரு அடிப்படை உரிமை மீறல் இல்லையா? என ஊடகவியலாளர் இர்பான் இக்பால் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அத்தே ஞானசேர தேரர் ” ஆம் நீங்கள் கூறுவது சரி, நாங்கள் அந்த விடயத்தை அவ்வளவு பெரிது படுத்தவில்லை ” எனத் தெரிவித்தார்.
எனினும் தாம் முஸ்லிம் விரோத இயக்கமல்ல என்று கூறிக்கொண்ட அவர் ஹலால் விடயத்தில் தாம் ஹலால் சான்றிதழ் வழங்கப்படும் முறையையே எதிர்ப்பதாகக் கூறிய நிலையில் நாளைய தினம் அரச அனுசரணையில் இது தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்கும் கூட்டம் இடம்பெறப்போவதாக அறிவித்தல்கள் வெளியாகியிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: