கட்டாரில் மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சார்பில் அந்நாட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்டாரிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கல்ப் நிவ்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது .
குறித்த மேன்முறையீட்டுக்கான சட்ட செலவை ஏற்றுக் கொள்ள இலங்கை தூதரகம் இணங்கியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து
கட்டாரிலுள்ள சட்டத்தரணி ஒருவரை சந்தித்து கலந்துரையாடியதாக கட்டாரிலுள்ள
இலங்கைத் தூதரகத்தின் தொழிலாளர் நலன்புரி உத்தியோகத்தர் W.A.M.வண்சேகர
குறிப்பிட்டுள்ளார்.
வழக்கிற்கான கட்டணங்களை செலுத்துவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்டார் சட்டங்களுக்கு அமைய, மரணதண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் 60 நாட்களுக்குள் மேன்முறையீடு தாக்கல் செய்ய முடியும்.
2011 ஆம் ஆண்டு தம்முடன் பணியாற்றிய இந்தியர் ஒருவரை கொலை செய்த
குற்றச்சாட்டிற்காக சுதேஸ்கருக்கு கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மரண
தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில்
மரணமானவரின் குடும்பத்தினர் சுதேஸ்கரின் தரப்பில் இருந்து குருதிப்பணத்தை
பெற்றுக் கொள்ள இணக்கம் தெரிவித்ததை அடுத்து அதற்கான நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்படுகின்றன.
கந்தானை பகுதியைச் சேர்ந்த சுதேஷ்கர்
2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் கட்டாருக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளதுடன்
2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்நாட்டு பொலிஸாரினால் அவர் கைதுசெய்யப்பட்டார்.
கட்டாரில் மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சார்பில் அந்நாட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்டாரிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கல்ப் நிவ்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது .
குறித்த மேன்முறையீட்டுக்கான சட்ட செலவை ஏற்றுக் கொள்ள இலங்கை தூதரகம் இணங்கியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கட்டாரிலுள்ள சட்டத்தரணி ஒருவரை சந்தித்து கலந்துரையாடியதாக கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தொழிலாளர் நலன்புரி உத்தியோகத்தர் W.A.M.வண்சேகர குறிப்பிட்டுள்ளார்.
வழக்கிற்கான கட்டணங்களை செலுத்துவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்டார் சட்டங்களுக்கு அமைய, மரணதண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் 60 நாட்களுக்குள் மேன்முறையீடு தாக்கல் செய்ய முடியும்.
2011 ஆம் ஆண்டு தம்முடன் பணியாற்றிய இந்தியர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டிற்காக சுதேஸ்கருக்கு கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மரணமானவரின் குடும்பத்தினர் சுதேஸ்கரின் தரப்பில் இருந்து குருதிப்பணத்தை பெற்றுக் கொள்ள இணக்கம் தெரிவித்ததை அடுத்து அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
கந்தானை பகுதியைச் சேர்ந்த சுதேஷ்கர் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் கட்டாருக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளதுடன் 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்நாட்டு பொலிஸாரினால் அவர் கைதுசெய்யப்பட்டார்.

0 கருத்துகள்: