முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் பொதுபலசேனா அமைப்பை தான் ‘தலிபான் நிகாய’ யவாகவே அடையாளம் காண்பதாக ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,
முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் இலங்கை முஸ்லிம்கள் பொறுமையாக இருப்பதைப்போன்று சர்வதேசத்தில் இருக்கும் கடும்போக்கு முஸ்லிம்களும் பொறுமையாக இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. இவ்வாறானதொரு சூழல் தொடர்ந்தால் அவ்வாறு அவர்கள் தலையிட்டு இலங்கையர்களுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடும்.
இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் ஹலால் சான்றிதழுக்கு எதிராகவும் பல்வேறு சுவரொட்டிகள் நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. சாதாரணமாக ஒரு சுவரொட்டியை அச்சிடுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பது எமக்குத் தெரியும். அப்படியானால் இவ்வளவு சுவரொட்டிகளை ஒட்டவும் அவற்றை அச்சிடவும் பொதுபலசேனாவுக்கு நிதி எவ்வாறு கிடைக்கிறது.
இதற்கான நிதி பாதுகாப்பு அமைச்சினூடாக இரகசியமாக வழங்கப்படுகிறது.இதன் மூலமே முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் பின்னணியில் அரசுக்கும் பங்குள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் இவர்களை ‘தலிபான் நிகாய’ என்றே அடையாளப்படுத்தவேண்டியுள்ளது. என தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: