(சிங்களத்திலிருந்து தமிழுக்கு)
ஹெல உருமய உட்பட பலர் இனவாதத்தை, மதவாதத்தை முன்னிலைப்படுத்தி பொது பல சேனா போன்ற இயக்கங்களின் ஊடாக மீண்டும் இந்த நாட்டை நாசமக்குவதற்கு செயல்படுகின்றன என்று தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித தேரர் (ஐ.தே.சு.மு.) தெரிவித்தார்.
தென் மாகாண சபை கூட்டம் தலைவர் கே.ஏ. சோமவங்சவின் தலைமையில் கூட்டப்பட்ட பொழுது சமித தேரர் இதனைக் கூறினார். அவர் மேலும் பேசும் போது:
‘நாம் அனைத்து சமயங்களையும் மரியாதை செய்ய வேண்டும். நான் பௌத்த சமயத்தை மதிக்கின்றேன். அதே நேரம் ஏனைய சமயங்களுக்காகவும் முன்வருகின்றேன். முஸ்லிம்களுக்கு எதிராக குழுக்களை இயக்கிக்கொண்டு ஹெல உருமய நாட்டை நாசமாக்க முயற்சிக்கின்றார்கள்.
30 வருட காலமாக கொன்று அழிந்த யுத்தத்தில் ஈடுபட்டோம். தற்போது போர் நிறுத்தப்பட்டாலும் யுத்தம் முடிவடையவில்லை. வடக்கின் வாலிபர்கள் முகாம்களின் சுவர்களில் எழுதிவைத்துள்ளார்கள் இந்த சீமெந்தை சிங்களவரின் இரத்தினால் பிசைந்து பிரபாகரனின் சிலையை வடிக்கவேண்டும் என்று. இன்றும் எமது நாட்டில் மலைநாட்டான், கீழ்நாட்டான் என்ற பேதம்இருக்கின்றது. தலதா பெரகராவில் இன்று வரையிலும் கீழ்நாட்டு மேளத்தையும் யக் பெரயவையும் (ஒரு வகை மேளம்) இசைக்க அனுமதிக்க மாட்டார்கள். ஆகவே சிங்களவர், தமிழர், முஸ்லிம் அனைவருக்கும் அமைதியாக வாழக்கூடிய முறைமையொன்றை உருவாக்க வேண்டும்.
தமிழர்கள் சூரியனையும் சந்திரனையும் கேட்கவில்லை. அதிகாரத்தை பகிரக் கோரினார்கள். தெற்கில் எமக்கு தீர்மானங்களையும் முடிவுகளையும் மேற்கொள்வதற்கு இருக்கின்ற உரிமை தமிழ் மக்களுக்கும் இருக்க வேண்டும். பேரினத்தின் கருத்தை ஏற்கொள்டா என்ற ஹெல உருமயவின் கருத்து பிழையானது.
சோம தேரர் காலமானது சர்வதேச சதியென்று கூறினாலும், சோம தேரருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க ஹெல உருமயவின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் ஒரேயொரு விவாதத்தையேனும் கோரவில்லை. இனம், மனத், குலம் எனப் பிரிந்து நிற்காமல் சட்டத்தின் ஆட்சியை உருவாக்க வேண்டும். எல்லா மக்களுக்கும் சமத்துவம், நியாயம் கிடைக்க வேண்டும்.

By Hisham Hussain (facebook)
on February 18, 2013
@ 17:04
on February 18, 2013
@ 17:04
0 கருத்துகள்: