ஹலால் விவகாரம் தொடர்பில் எழுந்திருக்கும் சர்ச்சைகள் தொடர்பில் கடும் அதிருப்தியை
வெளிப் படுத்தியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த விடயத்தில்
அரசு ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேற்படி நிலைப் பாட்டை அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பின ருமான இரா.சம்பந்தன் விளக்கினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:
ஓர் இனத்தினுடைய, மதத்தினுடைய உரிமைகளில் எவரும் தலையிட முடியாது. அவர்களுடைய உரிமைகள் தொடர்பான முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் அவர்களுக்கு இருக்கவேண்டும். இன,மத ரீதியான முடிவுகள் சம்பந்தமாக ஏனைய மதத்தவர்கள் தமது கருத்தைத் திணிக்க முடியாது. தமது விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஓர் இனம், ஒரு மதம் தீர்மானங்களை எடுக்கவேண்டு மென எவரும் கூறமுடியாது. அது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.
ஹலால் என்பது மதத்தோடு சம்பந்தப்பட்டது. காலாதி காலம் அது நடைமுறையில் உள்ளது. அதனை மதிக்க வேண்டியது எமது கடமை. ஹலால் விடயத்தை முஸ்லிம் மக்கள், எவர் மீதும் திணித்ததில்லை. ஹலால் என்பது முஸ்லிம் மக்களைக் கட்டுப்படுத்தும் வழிநடத்தும் தனிப்பட்ட உரிமைகளைக் கொண்டது.
இந்த விடயத்தில் தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள், பிரசாரங் கள் செய்து தேவையற்ற நிலைமைகளை ஏற்படுத்துவதை ஏற்க முடியாது. நாட்டில் அனைத்து இன, மதங்களையும் அரசு ஒன்றாகக் கணிக்குமாயின் இந்த விதமான ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களைத் தடுக்கும் வகையில் ஆக்கபூர்வமாகச் செயற்பட்டு சட்டம், ஒழுங்கைப் பேணவேண்டும். அரசு இந்த விடயத்தில் தனது கடமையைச் சரிவரச் செய்யாமலிருப்பது தவறு என்றும் குறிப்பிட்டார் சம்பந்தன்.
இன, மத ரீதியான முடிவுகள் சம்பந்தமாக ஏனைய மதத்தவர்கள் தமது கருத்தைத் திணிக்க முடியாது. நாட்டில் அனைத்து இன, மதங்களையும் அரசு ஒன்றாகக் கணிக்குமாயின் இந்த விதமான ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களைத் தடுக்கும் வகையில் ஆக்கபூர்வமாகச் செயற்பட்டு சட்டம், ஒழுங்கைப் பேணவேண்டும். அரசு இந்த விடயத்தில் தனது கடமையைச் சரிவரச் செய்யாமலிருப்பது தவறு என்றும் குறிப்பிட்டார் சம்பந்தன்.

0 கருத்துகள்: