பொலனறுவையை வதிவிடமாக கொண்டு உள்ள
தமிழர் ஒருவர் அவரது நான்கு பிள்ளைகளையும் வாழ்வாதாரம் எதுவும் அற்ற நிலையில் பௌத்த சாசனத்துக்கு தாரை வார்த்துக் கொடுத்து உள்ளார்.

இவரின் பெயர் சுந்தரலிங்கம். மட்டக்களப்பு சொந்த இடம். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டாய ஆட்சேர்ப்பில் இருந்து தப்புகின்றமைக்காக பொலனறுவையில் கரபொல கிராமத்துக்கு வந்து குடியேறினார். இங்கு பெட்டிக் கடை ஒன்றை அமைத்து வியாபாரம் செய்தார்.

இக்கிராமத்தை சேர்ந்த கமலா புர்மி என்கிற யுவதியை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கை நடத்தினார். மூன்று ஆண்களும், ஒரு பெண்ணுமாக நான்கு குழந்தைகள் பிறந்தன.

இவரின் வருமானம் குடும்பத்தை சமாளிக்க போதவில்லை. எனவே மனைவி கமலா அரைகுறை மனதோடு பிள்ளைகள், கணவன் ஆகியோரை பிரிந்து அரேபிய நாடு ஒன்றுக்கு பணிப் பெண்ணாக சென்றார்.

இதற்காக இவர் வீட்டை அடகு வைக்க நேர்ந்தது. அத்துடன் கடன்பட வேண்டியும் ஏற்பட்டது.

ஆயினும் வேலைக்கு சென்ற மனைவியிடம் இருந்து இது வரை எவ்வித தகவலும் இல்லை. இவரை வேலைக்கு அனுப்பிய முகவர்களை கேட்டபோது கடுமையான வார்த்தைகளால் சுந்தரலிங்கத்தை பேசி விட்டனர்.

வீதிக்கு வந்து விட்டார் சுந்தரலிங்கம். பிள்ளைகளுக்கு ஒரே பசி. ஆற்றுவாரும், தேற்றுவாரும் இல்லை. அப்போது ஒரு கூட்டம் ஆண்கள், பெண்கள் கொழும்பு நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

நான்கு பிள்ளைகளையும் தரச் சொல்லி இவரை தரச் சொல்லி இவரை கட்டாயப்படுத்தினர். தலா ஒரு இலட்சம் ரூபாய் தருவார்கள் என்று ஆசை வார்த்தைகள் சொல்லியும் பார்த்தார்கள். இவர் மசியவில்லை. திரும்பி வருகின்றபோது பிடித்துச் செல்வார்கள் என்று அதட்டி விட்டு வாகனத்தில் கிளம்பினார்கள்.

பயந்தே போனார் சுந்தரலிங்கம். பிள்ளைகளை காப்பாற்றுகின்றமைக்கு வழி தேடினார். ஊரவர்களிடம் முறையிட்டார். ஊரவர்கள் இங்கு உள்ள விகாரையின் பிரதம விகாராதிபதியிடம் சரண் அடைய சொல்லி இவரை அறிவுறுத்தினார்கள்.

இவர் பிள்ளைகள் சகிதம் விகாராதிபதியிடம் சரண் அடைந்தார்.

இவரின் சோகக் கதையை செவிமடுத்த விகாராதிபதி ஒரு மார்க்கம் சொன்னார்.

பிள்ளைகளை மனதை திடப்படுத்திக் கொண்டு பௌத்த சாசனத்துக்கு தந்து விடுங்கள் என்று கேட்டு இருக்கின்றார்.

இணங்கினார் சுந்தரலிங்கம். பிள்ளைகள் விகாராதிபதியிடம் கையளிக்கப்பட்டனர். இப்போது இருவர் பிக்குகளாகவும், சிறுமி பிக்குனியாகவும் இவர்கள் வளர்க்கப்படுகின்றனர். நான்காவது கடைக் குட்டி சின்ன பிள்ளையாக இருக்கின்றமையால் விகாரையில் ஓடியாடி விளையாடுகின்றார்.

மிகவும் திறமைசாலிகளாகவும், ஒழுக்க சீலர்களாகவும் வளர்க்கப்படுகின்றனர். தமிழ், சிங்களம், ஆங்கிலம், பாளி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

பிள்ளைகளை பல வேளைகளிலும் சுந்தரலிங்கம் கண்டு கொள்கின்றமை உண்டு. ஆயினும் இப்பிள்ளைகள் இப்போது தெய்வத்தின் குழந்தைகள்.

வறுமையால் பிள்ளைகளை பிக்கு ஆக்கிய தமிழன்!
 
உங்கள் நண்பன் பொலிஸ்

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய

Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts