அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை மக்களிடமிருந்து பிரித்து இஸ்லாம் பற்றிய தவறான கருத்துக்களை
வளர்ப்பதுதான் பொதுபல சேனாவின் நோக்கமாகும். மக்களை ஜம்இய்யத்துல்
உலமாவிடமிருந்து பிரித்து விட்டால் முஸ்லிம்களை துண்டாடுவது இலகுவாகும்.
இந்த சதி வலையில் எந்தவொரு முஸ்லிமும் சிக்கி விடக் கூடாது என அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உமாவின ஹலால் குழுவைச் சேர்ந்த அஷ்ஷெய்க் முர்ஷித் முலப்பர்
தெரிவித்தார்.
இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஹலால் சம்பந்தமான பதற்ற நிலை தொடர்பில் தெளிவுபடுத்தும் மாநாடு நேற்று(17) மஃரிப் தொழுகையை தொடர்ந்து தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பொதுபலசேனா அமைப்பு கலந்துரையாடல் ஒன்றுக்கு 200 கம்பனிகளுக்கு அழைப்பு விடுத்து. அக்கலந்துரையாடலில் 15 கம்பனிகளே கலந்து கொண்டிருந்தன. அதில் ஹலால் சான்றிதழை இரத்து செய்யுமாறு அழுத்தம் கொடுத்தது. எனினும் இரண்டு கம்பனிகளே ஹலால் சான்றிதழை இரத்து செய்ய ஒத்துக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
ஆயினும் ஒரு கம்பனி மட்டுமே ஹலால் சான்றிதழை தாம் தவிர்த்துக் கொள்ளப் போவதாக எமக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. ஆகவே குறுந்தகவல் மூலம், சில கம்பனிகள் ஹலால் சான்றிதழை இரத்துச் செய்துவிட்டதாக வெளிவரும் செய்தியில் உண்மை இல்லை.
முக்கியமான ஏற்றுமதி நிறுவனங்கள் முப்பத்தைந்தை கூட்டி அரசாங்கத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது அந்நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் தவிர்ப்பை மறுத்தன. அச்சான்றிதழை தவிர்த்துக் கொள்வதனால் தமது தயாரிப்புகளின் விற்பனை குறைந்துவிடும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழுக்கு சிறிய தொகையையே எம்மிடம் அறவிடுகிறது. எனினும் பொதுபல சேனா அமைப்பு இச்சான்றிதழை தவிர்க்குமாறு தொடர்ந்தும் அழுத்தம் தருவதாக அத்தரப்பினர் தெரிவித்தனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு ஹலால் சான்றிதழ் மூலம் மாதமொன்றுக்கு 15 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கிறது. அதேநேரம் ஹலால் விடயங்களுக்கென மட்டும் 13 இலட்சம் ரூபா செலவாகிறது. ஹலால் விண்ணப்பப் படிவம் நான்காயிரம் ரூபா பெற்றுக் கொண்டே விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.விண்ணப்பப் படிவம் இலவசமாகவே விநியோகிக்கப்படுகிறது.எனினும் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும்போதுதான் நான்காயிரம் ரூபா அறவிடப்படுகிறது. குறித்த நிறுவனம் பற்றியே மீளாய்வுக்காகவே அத்தொகை பெறப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் ஜய்இய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி ரிஸ்வி, அதன் செயலாளர் முபாராக் மௌலவி, ஜாமியா நளீமிய்யாவின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் ஆகியோரும் உரையாற்றினார்.

0 கருத்துகள்: