ஐதராபாத்
குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை உயர்வு!ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில்
இன்று நடந்த குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள தில்சுக் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து
நிலையத்தில் இன்று மாலை 7 மணியளவில் சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. அதே
நேரத்தில் கோனார்க் தியேட்டர் அருகிலும் குண்டு வெடித்தது. மற்றொரு
இடத்திலும் குண்டு வெடித்துள்ளது. இதில் தற்போதைய தகவல்படி 22 பேர்
உயிரிழந்துள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலி எண்ணிக்கை
மேலும் உயரும் என்று கருதப் படுகிறது. பலரின் உடல் நிலை கவலைக்கிடமாக
உள்ளதாகவும் கூறப் படுகிறது.
இச்சம்பவத்தால் ஹைதராபாத் முழுவதும்
பதட்டம் நிலவி வருகிறது. நகரம் முழுவதும் வேறு இடங்களில் குண்டுகள்
உள்ளனவா? என்று காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
0 கருத்துகள்: