கடந்த செவ்வாய்க்கிழமை ரி.என்.எல். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேரடி நிகழ்ச்சியின்
மறு ஒளிபரப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதன் போது கலபொடஅத்தே
ஞானசார தேரர் ஓர் அப்பட்டமான பொய்யை அநத நேரடி நிகழ்ச்சியின்போது கூறி,
நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த அனைத்து மக்களையும் பிழையான வழியில்
இட்டுச்சென்றார்.
கடந்த 2012.12.07ம் திகதி வரகாபொலை நாங்கல்லையில் லொறியொன்றில் மோதி, சிறுவன் ஒருவன் காயமடைந்ததாகவும், அப்போது லொறி சாரதியை அருகில் உள்ள பள்ளிவாசலில் இருந்து வந்த முஸ்லிம்கள் தாக்கி, அந்த சாரதியின் இரு கால்களையும் உடைத்து, உடம்பில் பாரிய கல்லொன்றை தூக்கி போட்டு, இப்படித்தான் ஷரீஆ சட்டம் என்று கூறி தாக்கியதாகவும், அதில் அவர் படுகாயமடைந்து, கவலைக்கிடமான நிலையில் இருந்த போதிலும், நாங்கல்லை ஜூம்ஆ பள்ளிவாசலை நாங்கள் தாக்கவில்லையென்றும், சிங்கள மக்கள் அமைதியாக இருந்ததாகவும், அப்பட்டமான பொய்யொன்றை கூறி, சிங்கள மக்களை உசுப்பேற்றி, கலபொடஅத்தே ஞானசார தேரர் சுய இலாபமீட்ட முயற்சித்தார்.
எனினும் அந்த நேரடி விவாதத்தில் கலந்து கொண்ட மூன்று முஸ்லிம் பிரதிநிதிகளும், இந்த சம்பவத்தின் உண்மை நிலையை அறிந்திருக்கவில்லை. அத்துடன் வரகாபொலை, நாங்கல்லை பகுதியை சேர்ந்த பலர், ரி.என்.எல். நிறுவனத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உண்மை நிலையை விளக்க முயற்சித்த போதிலும், அது பயனளிக்கவில்லை. எனினும், உண்மையில் நடந்தது இதுதான்…
நாங்கல்லை முஸ்லிம் வித்தியாலயத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் 6 வயது மாணவனான முஹம்மது நியாஸ் அப்துல் ஹூஸைன் என்பவர், பாடசாலைக்கு சென்று வீடு திரும்பும்போது, பாடசாலைக்கு முன்னாள் உள்ள மஞ்சள் கோட்டில் வீதியை கடக்க முற்பட்டார். மஞ்சள் கோட்டின் முக்கால் பகுதியை கடந்ததன் பின்னர், குருநாகல் பகுதியிலிருந்து வந்த ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான லொறியொன்று, இச்சிறுவன் மீது மோதுண்டு, படுகாயமடைந்து, வரகாபொலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், உயிரிழந்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் உணர்ச்சிவசப்பட்ட அங்கிருந்த சிலர், சாரதியை தாக்கியது உண்மை. எனினும், தேரர் கூறியது போன்று நாங்கல்ல ஜூம்ஆ பள்ளிவாசலிருந்து வந்த முஸ்லிம்கள் மாத்திரம் சாரதியை தாக்கவில்லை. அவ்விடத்திலிருந்த பலரும் அந்த சந்தர்ப்பத்தில் உணர்ச்சிவசப்பட்டு தாக்கினார்கள். கால்கள் உடைக்கப்பட்டு, உடம்பில் கல்லொன்று போடப்பட்ட கதைகள் அனைத்தும், தேரரினால் திரிவுபடுத்தப்பட்ட கதைகளாகும். இது தொடர்பாக வரகாபொலை பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டு பிரதி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பொறுப்பு வாய்ந்த தேரர்கள் ஊடகங்களில் இடம்பெறும் விவாதங்களின்போது பொய்யான தகவல்களை கூறி, பெரும்பான்மை மக்களை பிழையான வழியில் இட்டுச்சென்று, சமூகங்களுக்கிடையே நிலவும் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதையிட்டு, இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். வரகாபொலை பொலிஸார் மிக நடுநிலையாக செயற்பட்டு, சாரதியை தாக்கியவர்களை கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுத்த போதிலும், குறித்த தேரர், பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்று குற்றம் சாட்டியமையும், பிழையான ஒரு தகவலாகும்.

0 கருத்துகள்: