கடந்த
1999-ம் ஆண்டு நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி
தாய்மொழி தினம் வருடாவருடம் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது.
தாய்மொழி என்பது வெறும் கருவி இல்லை; ஓர் இனத்தின் பண்பாடு, கலாசாரம்
,வாழ்க்கைமுறை, சிந்தனை எல்லாவற்றிலும் முக்கிய பங்காற்றும், நீங்காத
அங்கமாக இருக்கும் சிறப்பு அன்னை மொழிக்கு உண்டு.
அன்னை மொழியை பிழையறப் பேசவும் எழுதவும் தெரியாமல் இளைய சமுதாயத்தை வளர்த்து விடுகிறோம் என்பது வருத்தமானது.
உலகில் அதிக இலக்கிய நோபல் பரிசுகளை அள்ளி இருக்கும் பிரான்ஸ் நாட்டு
மக்கள் பிரெஞ்சு மொழியில் பேசுவதை பெருமையாக நினைப்பவர்கள், தாய் மொழியை
புறக்கணித்து பிள்ளைகளின் இயல்பான சிந்தனையை சிதைக்கிறோம் என
எச்சரிக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
கவனம் அன்பர்களே!
பாரதி, காந்திக்கு திருவல்லிக்கேணி கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசியதற்கு
எதிர்ப்பு தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். உங்கள் அன்னை மொழி
குஜராத்தியிலோ அல்லது பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியான ஹிந்தியிலோ
உரையாற்றி இருக்கலாமே? என கேள்வி எழுப்ப, இனிமேல் அவ்வாறே செய்கிறேன்.
நீங்கள் ஏன் இக்கடிதத்தை ஆங்கில மொழியில் எழுதினீர்கள் என காந்தி கேட்க,
பிறர் மனம் நோக எழுதும்பொழுது அன்னை மொழியை உபயோகபடுத்த கூடாது என்பதே
எங்களின் பண்பாடு என்று பதில் தந்தார்.
தாய்மொழி வெறும் தாய் சொல்லித் தந்த மொழி மட்டுமில்லை; தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்பட வேண்டிய மொழி எனப் பாடம் நடத்தினார் பாரதி.
அன்னை மொழி மீதான பற்று ஒவ்வொருவருக்கும் கட்டாயத் தேவை மட்டுமல்ல; அதை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும்.
0 கருத்துகள்: