
நாசா
விஞ்ஞானிகள், நமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே முதன் முறையாக ஒரு
கிரகத்தை கண்டுபிடித்தனர். இது சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டறியப்பட
மிகச் சிறிய கிரகம் ஆகும்.
நாசாவில் கெப்லர் என்கிற விண்வெளி தொலை
நோக்கியின் உதவியுடன் இதனைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கிரகம் சூரியன்
போன்றதொரு நட்சத்திரத்தை 13 நாட்களில் சுற்றுகிறது. அண்டத்தில், இந்த
கிரகம் பூமியிலிருந்து 210 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள மற்றொரு விண்வெளிக்
குடும்பத்தில் உள்ளது. இது பூமியின் அளவில் மூன்றில் ஒருமடங்கு அளவுடையது.
புதன் கிரகத்தை விட சிறியது. இந்தக் கிரகத்துக்கு கெப்லர்-37பி என்று
பெயரிடப்பட்டது.
இதன் அருகிலேயே
மேலும் இரண்டு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெள்ளி கிரகத்தை விட
அளவில் உள்ள ஒரு சிறிய கிரகத்துக்கு கெப்லர் 37சி என்று
பெயரிடப்பட்டுள்ளது. பூமியைப் போல இரண்டு மடங்கு பெரிய மற்றொரு
கிரகத்துக்கு கெப்லர் 37டி என்று பெயரிட்டுள்ளனர்.
இவை சூரியனை
விட அளவில் சிறிய குளிர்ச்சியான நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. இந்தக்
கிரகங்களின் குடும்பம் கெப்லர் 37 என்று அழைக்கப்படுகிறது.
0 கருத்துகள்: