பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதியில் எண்ணை மற்றும் எரிவாயு வளம் மிகுந்த பலுசிஸ்தான் மாகாணம் உள்ளது.
இதன் தலைநகரான குவெட்டாவிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஷியா
பிரிவினர் பெரும்பான்மையாக உள்ளனர். சிறுபான்மையினரான இவர்கள் மீது சன்னி
பிரிவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் குவெட்டா அருகேயுள்ள ஹஷாரா நகரில் உள்ள மார்கெட்டில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
இதில், இப்பகுதியில் இருந்த அடுக்குமாடி கட்டிடம் முற்றிலும் இடிந்து தரை
மட்டமானது. அது தவிர கடைகள், வீடுகள் இடிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும்
கடும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
தொடக்கத்தில் குண்டு
வெடிப்பில் 42 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பள்ளிச் சிறுமிகளும்
அடங்குவர். இவர்கள் தவிர, 250 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் மேலும் பலர் உயிரிழந்தனர்.
அதனால் தற்போது சாவு எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.
கட்டிட
இடிபாடுகளில் இன்னும் ஏராளமானவர்கள் சிக்கி கிடக்கின்றனர். அவர்களை
மீட்கும் பணி நடக்கிறது. அநேகமாக அங்கு சிக்கியிருப்பவர்களில்
பெரும்பாலானோர் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று பொலிசார்
கருதுகின்றனர். எனவே, சாவு மேலும் உயரும் அபாயம் உள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தில் வாழும் ஷியா பிரிவினர் மீது சன்னி பிரிவை சேர்ந்த
லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தான் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி
வருகின்றனர்.
தற்போது நடந்த குண்டு வெடிப்புக்கும் அவர்களே
பொறுப்பு ஏற்றுள்ளனர். குண்டு வெடிப்பு நடந்தவுடன் அப்பகுதி மக்கள் மிகவும்
கோபமடைந்தனர். மீட்பு பணியில் ஈடுபட வந்த பொலிசார், ஊடகத்தினர் மற்றும்
ஊழியர்களை அங்கு அனுமதிக்கவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
பொலிசார் மீது கல்வீசி தாக்கினார்கள். பாகிஸ்தான் அரசுக்கெதிராக கோஷங்களை
எழுப்பினார்கள். தங்களுக்கு அரசு போதிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று
குற்றம் சாட்டினர்.
இந்த துயர சம்பவத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் ஷியா பிரிவினர் வாழும் குவெட்டா பகுதியில் 3 நாள் துக்கம் அறிவித்துள்ளனர்.
கடந்த மாதம் (ஜனவரி) 10ம் திகதி குவெட்டாவில் கும்பலாக சென்ற ஷியா
பிரிவினர் மீது லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசி
தாக்கினார்கள். அதில் 92 பேர் பலியாயினர். 121 பேர் காயமடைந்தனர். கடந்த
2012ம் ஆண்டில் மட்டும் அப்பகுதில் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதியில் எண்ணை மற்றும் எரிவாயு வளம் மிகுந்த பலுசிஸ்தான் மாகாணம் உள்ளது.
இதன் தலைநகரான குவெட்டாவிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக உள்ளனர். சிறுபான்மையினரான இவர்கள் மீது சன்னி பிரிவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் குவெட்டா அருகேயுள்ள ஹஷாரா நகரில் உள்ள மார்கெட்டில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
இதில், இப்பகுதியில் இருந்த அடுக்குமாடி கட்டிடம் முற்றிலும் இடிந்து தரை மட்டமானது. அது தவிர கடைகள், வீடுகள் இடிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
தொடக்கத்தில் குண்டு வெடிப்பில் 42 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பள்ளிச் சிறுமிகளும் அடங்குவர். இவர்கள் தவிர, 250 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் மேலும் பலர் உயிரிழந்தனர். அதனால் தற்போது சாவு எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.
கட்டிட இடிபாடுகளில் இன்னும் ஏராளமானவர்கள் சிக்கி கிடக்கின்றனர். அவர்களை மீட்கும் பணி நடக்கிறது. அநேகமாக அங்கு சிக்கியிருப்பவர்களில் பெரும்பாலானோர் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று பொலிசார் கருதுகின்றனர். எனவே, சாவு மேலும் உயரும் அபாயம் உள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தில் வாழும் ஷியா பிரிவினர் மீது சன்னி பிரிவை சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தான் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
தற்போது நடந்த குண்டு வெடிப்புக்கும் அவர்களே பொறுப்பு ஏற்றுள்ளனர். குண்டு வெடிப்பு நடந்தவுடன் அப்பகுதி மக்கள் மிகவும் கோபமடைந்தனர். மீட்பு பணியில் ஈடுபட வந்த பொலிசார், ஊடகத்தினர் மற்றும் ஊழியர்களை அங்கு அனுமதிக்கவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிசார் மீது கல்வீசி தாக்கினார்கள். பாகிஸ்தான் அரசுக்கெதிராக கோஷங்களை எழுப்பினார்கள். தங்களுக்கு அரசு போதிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
இந்த துயர சம்பவத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் ஷியா பிரிவினர் வாழும் குவெட்டா பகுதியில் 3 நாள் துக்கம் அறிவித்துள்ளனர்.
கடந்த மாதம் (ஜனவரி) 10ம் திகதி குவெட்டாவில் கும்பலாக சென்ற ஷியா பிரிவினர் மீது லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்கினார்கள். அதில் 92 பேர் பலியாயினர். 121 பேர் காயமடைந்தனர். கடந்த 2012ம் ஆண்டில் மட்டும் அப்பகுதில் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்: