
அதேவேளை, போராட்டக்காரர்களையும் அமைதி காக்குமாறும் பழிவாங்கல் நோக்கோடு செயற்பட வேண்டாம் என்றும் நவி பிள்ளை கேட்டுக் கொண்டுள்ளார்.
கெய்ரோவில் ஆர்ப்பாட்டங்களின்போது சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் பள்ளிவாசலுக்கு வெளியே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன
நேற்றைய தாக்குதல்களில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டு சடலங்களுடன் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் தங்கியுள்ள அல் ஃபட்டா பள்ளிவாசலை பாதுகாப்புப் படையினர் சூழ்ந்துகொண்டுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு பள்ளிவாசலுக்குள் புகுந்த இராணுவத்தினர் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் வெளியேறிய சிலர் கைதுசெய்யப்பட்டதை அடுத்து, மற்றவர்கள் வெளியேற மறுத்துவிட்டனர்.
பள்ளிவாசலுக்குள்ளே நாற்காலிகள் பாதுகாப்பு அரண் போல அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை வீடியோ காட்சி ஒன்று காட்டுகின்றது.
முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினர் இன்று முதல் ஒருவார காலத்துக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
0 கருத்துகள்: