அகில
இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கும் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவுக்கும்
இடையில் இடம்பெற்ற ஷவ்வால் மாத தலைப்பிறை சர்ச்சை தொடர்பான விரிவான கூட்டம்
சற்று முன்னர் நிறைவு பெற்றுள்ளது.
இன்று காலை 11.30 மணி முதல்
மாலை 06.00 மணி வரை இடம்பெற்ற இக் கூட்டத்தில் ஷவ்வால் பிறையை
தீர்மானிப்பதில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கான காரணங்கள் விரிவாக
ஆராயப்பட்டதாகவும் இரு பக்க நியாயங்கள் தொடர்பில் கருத்துக்கள்
பரிமாற்றப்பட்டதாகவும் கூட்டத்தில் பங்கேற்ற முக்கியஸ்தர் தெரிவித்தார்.
இதன்போது இணக்கம்காணப்பட்ட விடயங்கள் கூட்டறிக்கை மூலம் இன்றைய தினம்
ஊடகங்களுக்கு வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்
0 கருத்துகள்: