கொழும்பு கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் (10.09.13 மாலை மஃரிப் தொழுகையின் போது) பௌத்த மதகுருமார் தலைமையிலான காடையர் கும்பலால் தகர்க்கப்பட்டுள்ளது.

இதனால் தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்கள் அச்சத்துக்கும் அசௌகரியத்துக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மதகுருமார் தலைமையிலான காடையர்கள் அருகில் உள்ள முஸ்லிம்களின் சில வீடுகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தி பிரதேச முஸ்லிம் மக்களையும் அசசத்துக்கு ஆளாக்கியுள்ளனர்.

இது மிக வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய காட்டுமிராண்டித் தனமான பயங்கரவாதமாகும் இவ்வாறு தெரிவித்துள்ளார் தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அஸாத் சாலி. அவர் இது சம்பந்தமாக ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இந்த பள்ளிவாசல் மூடப்படவேண்டும் என பௌத்த மதகுருமார் தலைமையிலான காடையர்கள் காலக்கெடு விதித்திருந்தனர். இவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தவர்கள் யார்? என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்.ஆனால் இந்தப் பள்ளிவாசல் பற்றிய பேசு;சுவார்த்தைகளில் முஸ்லிம்கள் மிக நிதானமாகவும் அமைதியாகவும் ஈடுபட்டதோடு சம்பந்தப்பட்ட தரப்பினரை அனுகி பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளில் ஈடபட்டனர்.அதன் அடிப்படையில் மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது கலாசார அமைச்சு இந்தப் பள்ளிவாசலை தொடர்ந்து நடத்திச் செல்ல எழுத்து மூலம் அனுமதி வழங்குமானால் பள்ளிவாசலுக்குத் தேவையான பாதுகாப்பை தான் வழங்கத் தயார் என்று அவர் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த விடயத்தில் துரிதமாகச் செயற்பட்ட பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா கலாசார அமைச்சின் பிரதிநிதிகளுக்கு உரிய விளக்கத்தை அளித்து அமைச்சின் சம்மதக் கடிதத்தைப் பெற்று அதனோடு சேர்த்து மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவுக்கு முகவரியிட்டு ஒரு கடிதத்தை எழுதி பள்ளிவாசலுக்கு பாதுகாப்பை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் இந்தப் பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தயானந்த என்பவர் இநதப் பள்ளிவாசலை நடத்திச் செல்ல அனுமதிக்க மாட்டேன் அவ்வாறு நடக்குமானால் நான் எனது சீருடையை கழற்றி வைத்துவிட்டு போராடத் தயார் என்று பிரதேச மக்களிடம் சவால் விடுத்ததாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தப் பின்னணியில் தான் கலாசார அமைச்சின் கடிதம் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்கப்பட்ட மறுதினமே இந்தப் பள்ளிவாசலை காடையர் கும்பல் சுற்றிவளைத்து தகர்த்துள்ளது. மகிந்த ராஜபக்ஷ அரசு தான் இதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஜனாதிபதி நாட்டிலுள்ள ஒரு பௌத்த விகாரையைக் கூட மிச்சம் வைக்காமல் எல்லாவற்றுக்கும் ஒரு சீரான ஒழுங்கு முறையின் கீழ் சென்று வழிபட்டு அவற்றின் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்த்தும் வருகின்றார். இது தவறு என்று நாம் சொல்லவில்லை.

அதை அவர் நன்றாகச் செய்யட்டும். ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் அவர்கள் வாழும் இடங்களில் அவர்களின் சொந்தப் பணத்தில் ஒரு பள்ளிவாசலை நிர்மாணித்து அதில் வழிபாடுகளை நடத்த அவரின் ஆட்சியில் அனுமதி மறுக்கப்படுவது ஏன்? இதுதான் எமது கேள்வி.

கிரேண்ட்பாஸ் பள்ளிவாசல் விடயத்தில் மீண்டும் ஒரு தடவை மகிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் பௌத்த மதகுருமார் தலைமையிலான கும்பலால் சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் பேணி நிலைநிறுத்தி பாதுகாக்க வேண்டிய காவல்துறை வழமைபோல் இந்தத் தடவையும் கைகட்டி வேடிக்கை பார்த்து தனக்கு தானே அவமானத்தைத் தேடிக் கொண்டுள்ளது. இந்தப் பள்ளிவாசல் விடயத்தில் ஒரு பொலிஸ் உயர் அதிகாரியின் உத்தரவாதமும் மீறப்பட்டுள்ளது.

தனது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட தேவையில்லாத அரசியல் விடயங்களில் எல்லாம் மூக்கை நுழைத்து வாய் கிழிய கருத்துத் தெரிவிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் முழுக்க முழுக்க தனது அதிகாரத்துக்கு சவால் விடுக்கும் இந்த காடையர் கும்பலின் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு எதிராக மட்டும் எதுவுமே செய்யாமல் மௌனம் காப்பது,இந்தக் காடையர் கும்பலின் பின்னால் நின்று உற்சாகம் அளிக்கும் சக்தியாக அவர்தான் இருக்கின்றாரா? என்ற சந்தேகத்தை முஸ்லிம்கள் மத்தியில் மேலும் வலுவடையச் செய்துள்ளது.

கிரேண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களின் தராதரம் பாராமல் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அரசாங்கம் தனது நம்பகத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts