ஒரு
முஸ்லிம் வணக்கஸ்தலத்தையாவது தமது அமைப்பு உடைத்தது என்பதை
உறுதிப்படுத்தினால், தனது காவி உடையை கழற்றி விட்டு, இராணுவத்தில் இணைந்து
கொள்ள போவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்
தெரிவித்திருந்தார் எனவும் தற்போது ஞானசார தேரர் அதனை செய்வதற்கான காலம்
கனிந்துள்ளதாகவும் மஹியங்கனை பிரதேச சபையின் உறுப்பினரும் மகாவலி மகா
விகாரையின் விகாரதிபதியுமான வட்டரெக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார்.
மலையக முஸ்லிம் பேரவை ஏற்பாடு செய்திருந்த வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 12 ஆம் திகதி ஞானசார தேரர் மஹியங்கனை விகாரைக்கு இரவில்
சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும் மறுநாள் முஸ்லிம் பள்ளிவாசல்
மீது தாக்குதல் நடத்தி, பன்றி இறைச்சியின் பாகம் வீசப்பட்டிருந்தது எனவும்
அவர் குறிப்பிட்டுள்ளாhர்.
முஸ்லிம் மக்களின் நிகாப் உடைகளை
பயன்படுத்தி கொள்ளையடிப்புச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அதேபோல்
பிக்குமாரின் காவி உடையை அணிந்து கொண்டு கொள்ளையடிக்கின்றனர். நிகாப் உடையை
தடைசெய்ய வேண்டும் என்ற யோசனையை முன்வைப்பார்களேயானால், காவியுடையணிந்த
காடையர்கள் குறித்தும் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என வட்டரெக்க விஜித
தேரர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்: