அன்புக்குரிய சகோதரர்களே இம்முறை ஷவ்வால் தலை பிறையை தீர்மானிப்பதில் பாரிய சர்ச்சை ஏற்பட்டு சமூகம் இரண்டானக பரிந்ததை நாம் அறிவோம். பிறை பார்க்கவேண்டிய ஷக்குடைய நாளான 07.08.2013 ம் அன்று பிறையை பார்க்குமாறு மக்களுக்கு பணித்து விட்டு பின்னர் பிறை கண்டதாக உறுதியான தகவல் அ.இ.ஜ.உ கிடைத்த போது அன்றைய தினம் பிறை தென்பட சாத்தியமில்லை என்று கூறி பிறைத் தகவலை மறுத்து முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைத்தது. ஓரிருவர் கண்ட பிறையை இவர்கள் மறுக்க வில்லை. கிட்டத்தட்ட 15ற்கு மேற்பட்ட முஸ்லிம்களால் பார்க்கப்பட்ட பிறையையே மறுத்துள்ளார்கள். பிறை தகவலை உறுதிப்படுத்தியவர்கள் சாதாரண குழுக்கல் அல்ல கிண்ணியா ஜம்மியதுல் உலமா சபையினாலேயே உறுதிப்படுத்தப்பட்டது. அது போன்று புத்தளம் நிகவரெடிய பகுதியிலும் பிறை பார்க்கப்பட்ட தகவல் கிடைத்துள்ளது.

பல முஸ்லிம் சகோதரர்களால் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு அல்லாஹ்வை ஷாஹிதாக முன்னிருத்தி சொல்லப்பட்ட சாட்சியத்தையே மறுத்துள்ளார்கள் அ.இ.ஜ.உ.இதற்கு இவர்கள் கூறும் வாதம் என்னவென்றால் வானியல் கணிப்பீட்டின் படி அன்றை தினம் இலங்கையில் பிறை தென்படுவதற்கான சாத்தியமில்லை என்பதாகும். அப்படியானால் பின்வரும் கேள்விகளுக்கு அ.இ.ஜ.உலமாவினரும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் குர்ஆன் ஹதீஸ் கொள்கையில் சற்று தடம்புரண்ட ஒரு சில தவ்ஹீத் வாதிகளும் பதில் தர வேண்டும். (சர்வதேச பிறை,உள்ளுர் பிறை என்று கருத்து வேறுபாடின்றி அத்தனை தவ்ஹீத் சகோதரர்களும் 08.08.2013 வியாழனன்று, 07.08.2013 இரவு இலங்கையில் பிறை பார்க்கப்பட்டதின் அடிப்படையில் பெருநாள் கொண்டாடினார்கள். குர்ஆன் சுன்னாவில் தெளிவில்லாத ஒரு சில தவ்ஹீத் வாதிகளை தவிற)

1. 07.08.2013 அன்று பிறை தெரியாது என்றால் எதற்காக பிறை பார்க்க ஏற்பாடு செய்து மக்களுக்கும் பார்க்குமாறு பணிக்க வேண்டும்?

2. வாணியல் கணிப்பீட்டை ஆதாரமாக முன் வைப்பவர்கள், இன்று வானியல் கணிப்பீட்டின் படி தெரியும் என்று இருக்கும் நிலையில் பிறையை கண்ணால் பார்க்காமல் நோன்பையோ, பெருநாளையோ தீர்மானிப்பதில்லையே அது ஏன்?

3. முஸ்லிம்கள் கண்ணால் கண்ட சாட்சியத்தை விட வானியல் கணிப்பீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கான ஆதாரம் என்ன?

4. பிறையை பார்க்க வேண்டும். பிறையை கண்டதாக சாட்சி கூறப்பட்டால் அதனை ஏற்க வேண்டும் என்பது இஸ்லாமிய சட்டமாகும். இஸ்லாமிய சட்டத்தை புறக்கணித்து விட்டு விஞ்ஞானத்தை – வானியல் கணிப்பீட்டை எப்படி ஆதாரமாக கொள்ள முடியும்? கணவன் மரணித்துவிட்டால் 4மாதம் 10 நாட்கள் பெண்கள் இத்தா இருக்க வேண்டும் என்பது இஸ்லாமிய சட்டம். விஞ்ஞானம் வளர்ச்சி கண்டதால் பெண்ணை விஞ்ஞான ரீதியாக பரிசோதித்துவிட்டு அவள் கருவை சுமக்கவில்லை என்று தெரிந்து விட்டால் அவள் இத்தா இருக்க தேவையில்லை என்று இவர்கள் கூறுவார்களா?

5. தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்று தொண்டை கிழிய கத்துகிறீர்களே தலைமை பிழை செய்தாலும் கட்டுப்பட வேண்டும் என்பற்கான ஆதாரம் என்ன? தலைமை தவறு செய்தால் அதற்கு கட்டுப்பட கூடாது என்று கூறும் பின்வரும் செய்திகளுக்கு பதில் என்ன?

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான அழகான முடிவாக இருக்கும். (திருக்குர்ஆன் 4:59)

நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் கட்டுப்பாடு என்பது கிடையாது. கட்டுப்படுவதெல்லாம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்யாத வரை. (நூல் : முஸ்லிம்)

6. இஜ்திஹாத் பண்ணி பெருநாள் எடுத்ததாக வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடிய தவ்ஹீத் சகோதரர்கள் கூறுகிறார்கள். இது அறிவீனமான வாதம் ஆகும். பிறை சாட்சியம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இஜ்திஹாத் செய்வதற்கு என்ன இருக்கிறது? தேளிவான விடயத்தில் இஜ்திஹாத் கிடையாது. கூட்டு துஆ பித்அத் என்பது தெளிவு. எனது இஜ்திஹாத் படி அது சுன்னா என்றால் ஏற்க முடியுமா?

7. வானியல் கணிப்பீட்டை ஆதாரம் காட்டுபவர்கள் moonsighting.com ஐ தான் ஆதாரமாக காட்டினார்கள். அதில் இலங்கை,இந்தியா,அரபு நாடுகளில் பிறை தெரியாது என்றே உள்ளது. ஆனால் இந்திய கேரலா மாநிலத்திலும், சவூதியின் பல பிரதேசங்களிலும் பிறை தென்பட்டதே அதனை அவர்களே பதிவு செய்துள்ளார்களே, அங்குள்ள முஸ்லிம்களும் அல்லாஹ்வை முன்னிருத்தி தானே சாட்சியம் கூறியிருப்பார்கள்? இதிலிருந்து வானியல் கணிப்பீட்டை ஆதாரமாக கொள்ள முடியாது என்பது தெளிவில்லையா?

ஜம்மியத்துல் உலமாவை பொருத்த வரையில் அவர்கள் குர்ஆன் சுன்னாவில் தெளிவில்லாதவர்கள். குர்ஆன் சுன்னாவை பிரச்சாரம் செய்கிறோம் என்று சொல்பவர்கள் அறிவீனமாக நடக்கக் கூடாது. செய்த தவறை ஒப்புக்கொள்ள வேண்டும். அல்லது குர்ஆன் சுன்னாவில் போதிய அறிவில்லையென்றால் தஃவாவை விட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். தான் செய்தது தான் சரியென்று அடம்பிடிக்கக் கூடாது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts