நோன்புப்
பெருநாள் நாட்டின் இதர பாகங்களில் பல்வேறு கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி
பொது மக்களை ஒரு சிக்கலான நிலைக்குத் தள்ளப்பட்டு புனித மிகு நோன்புப்
பெருநாள் இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டது ஆரோக்கியமான நிலை அல்ல என்று
மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் அஷ்ஷேஹ் ஜஸ்ரி ஜவாப்தீன் (நளீமி) அகில
இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்திய குழு கூட்டதொடரில் கருத்து வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிண்ணியா, மூதூர் ஆகிய பிரதேசங்களில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டதை
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை தலைவரின் ஊடக வியாக்கியானங்கள் சமூக
செயற்பாட்டாளர்களை அவமதிப்பதாகவே அமைந்திருந்தது. அத்தோடு மூத்த
ஊடகவியளாளரான அஹமட் முனவ்வர் அஷ்ஷேஹ் றிஸ்வி முப்தியொடு இலங்கை ஒலிபரப்பு
கூட்டுத்தாபனத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ‘பிறை பார்ப்பது மீன்
பிடிப்பது போன்றதல்ல’ என்ற கருத்ததை வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான
கருத்து மீனவ சமூகங்களை ஆத்திரமூட்டுபவையாகவே உள்ளது. இது ஊடக தர்மங்களை
மீறுகின்ற செயலாகும். நோன்புப் பெருநாள் பிறை கருத்து வேறுபாடுகளை மறந்து
இந் நாட்டு முஸ்லிங்களின் மத ஸ்தலங்கள் தாக்கப்படுவது மத சுதந்திரத்தை
கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடாகும்.
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா
சபை பிறை அமுலாக்க யாப்பில் சமூக சூழலுக்கு ஏற்ப திருத்தங்களை மேற்கொண்டு
சமூகங்களுக்கு மத்தியில் பிரிவுகளும், கருத்து முறன்பாடுகளும் ஏற்படுவதை
தவிர்த்து இஜ்திஹாத் உத்திகளை பயன்படுத்தி இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு
வெளிப்படைத் தன்மையோடும், சவால்களுக்கு உறுதியோடும், சுய நிர்ணயத்தொடும்
செயற்படுகின்ற பலமான சபையாக மாற வேண்டும் என கருத்து தெரிவித்தார்
0 கருத்துகள்: