இலங்கை
பல்லின சமய நாடல்ல. இது ஒரு தனி பெளத்த நாடு. 2,500 ஆண்டுகள் பழைமை
வாய்ந்த எமது கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என பொது பலசேனா
அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.
பொது பலசேனாவின் குருணாகல் மாவட்ட மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை குருணாகல் சத்தியவாதி மைதானத்தில் நடைபெற்றது.
அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை ஒரு சிங்கள நாடு. உலகில் வேறு சிங்கள நாடுகள் இல்லை. முஸ்லிம்,
கிறிஸ்தவக் குழுக்கள் சிங்கள பெளத்தர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி
மதம் மாற்றி வருகின்றன. இந்தச் செயற்பாட்டை அவர்கள் நிறுத்திக் கொள்ள
வேண்டும். இல்லாவிடின் அவர்களை ஓட ஓடத் துரத்துவோம். முஸ்லிம்
குழுக்கள் தங்கள் செயற்பாடுகளை முஸ்லிம் நாடுகளுக்குச் சென்று
மேற்கொள்ள வேண்டும். பெளத்த நாட்டில் இதற்கு இடமில்லை. பெளத்த
குடும்பத்தில் கூடுதலாகப் பிள்ளைகளைப் பெற வேண்டும் என்றார்
0 கருத்துகள்: