ஜம்மியாவின் ஷவ்வால் பிறை சம்பந்தமான விடயங்களை ஆராய்வதற்கு முன்னர் நாம் பின்வரும் கேள்விகளுக்கு பரிச்சயமாகியிருக்கவேண்டும்.
1.இம்முறை ஷவ்வால் பிறைக் கணிப்பு வானியல் தரவுகளை அடிப்படையாக வைத்து உலமா சபையினரால் எடுக்கப்பட்டதா? அல்லது சாட்சிகள் போதாமையினால் நிராகரிக்கபட்டதா?
2.கண்ணால் கண்ட சாட்சியங்களை வானியல் தரவுகளைக் காரணம் காட்டி நிராகரிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
2.கண்ணால் பிறையைக் கண்டதாக நம்பத்தகுந்த சாட்சிகள் கூறுமிடத்து அவர்களிடம் வானியல் காரணங்களுக்காக துருவித் துருவு கேள்விகள் கேட்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
மேற்கூறப்பட்ட கேள்விகளின் ஒளியில் நாம் இப்பிரச்சினையை ஆராய்வோம். சென்ற புதன் இரவு (2013.8.7) இரவு ஜம்மியதுல் உலமாவின் பிறை சம்பந்தமான முடிவு முடிவினை உத்தியோக பூர்வமாக அறிவித்தது.அதனைத்தொடர்ந்து
ஜம்மியாவின் தலைவர் முப்தி ரிழ்வியவர்கள் வியாழன் பகல் ஒரு மணியளவில்
தங்களின் முடிவை உறுதிப்படுத்தி பேசினார்.இவ்விரண்டு பேச்சுக்களும் பிறை
சம்பந்தமான ஜம்மியாவின் நிலைப்பாட்டை மக்களுக்கு உறுதிப்படுத்துவனவாகக்
காணப்படுகின்றன.
புதனிரவு பேட்டியளித்த உலம்மா சபையின் பத்வாக்குழு செயலாளர் ஹாஷிம் நூரியவர்கள் அவர்கள் பின்வருமாறு கூறினார், ‘’ அதாவது பிறை காணும் விடயத்தில் ஐந்து வகையான அடிப்படைகள் எங்களிடத்திலே இருகின்றது.அந்த அடிப்படைகளில் ஒன்று என்னவென்றால் பிறை காணச் சாத்தியம் இல்லை என்று நம்பகமான முஸ்லீம் வானவியல் அறிஞர்கள் சொல்லுமிடத்து அந்தச் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்ற ஒரு அடிப்படையும் எம்மிடத்திலே இருக்கின்றது.அந்த அடிப்படையை மையமாக வைத்து இந்த வானவியல் தரவையும் மையமாக வைத்து வந்த சாட்சியங்கள் எமக்கு உரிய முறையில் போதாததாக இருக்கின்ற காரணத்தினால் நாளை நோன்பைப் பூர்த்தியாக்குவதுதான் ஜம்மியதுல் உலமா வந்திருக்கின்றது என்ற செய்தியைச் சொல்வதோடு என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை மேலும் றிஸ்வி முப்தியவர்களின் பேச்சு உறுதி செய்கின்றது.
“அவர்களுடைய தீர்மானத்தின் படி ...உலகத்தில அதிகமான பகுதிகள்ல இது வெற்றுக் கண்ணால பார்க்கக் கூடிய சாத்தியம் இல்ல.அதுவும் பதினாலு நிமிஷத்தில அதுவும் பார்க்கக்கூடிய சாத்தியம்...The crescent moon will be easily visible by naked eyes in the southern part of chili and Argtina.it will not be visible by naked eyes in the most of the world……..சில இந்த அடிப்படைகளை வைத்து இவர்கள் கண்டது ஏற்றுக்கொள்ள முடியாது”
அவர்களின் இந்த இரண்டு பேச்சுகளில் இருந்து ஜம்மியதுல் உலமாவின் பிறைக்குழு ஆய்வாளர் டாக்டர் ஆக்கில் அஹமத் ஷரிப்தீனின் கட்டுரையில் இருந்தும், இம்முறை ஷவ்வால் பிறையைக் கண்டதாக கிண்ணியாவில் இருந்து கூறிய நம்பத்தகுந்த முஸ்லீம் சகோதரர்களின் சாட்சியத்தை வானிவியல் அறிஞர்கள் அந்த நாளில் பிறை காண முடியாது என்று கூறியிருக்கின்ற காரணத்தினால் அவர்கள் நம்பத்தகுந்த சாட்சியங்களாக இருந்தும் அவர்களின் சாட்சியங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பதோடு அதே வானியல் காரணியை அடிப்படையாக வைத்துத்தான் அச்சாட்சியங்கள் துருவித்துருவி விசாரிக்கப்பட்டுமிருக்கின்றன என்பது தெளிவாகின்றது.அதாவது இம்முறை ஜம்மியா பிறை கணிப்பை வானியல் கணிப்பின் அடிப்படையில்தான் எடுத்திருப்பது புலனாகிறது.
ஆரம்பகால அனைத்து இஸ்லாமியப் பேரறிஞர்கள் ஒன்று பட்டு ஏற்றுக் கொண்ட விடயம்தான் வானியல் கணிப்பினைப் பின்பற்றுவது கூடாது என்பதாகும்.இதனை நபிகளாரின் பின்வரும் கூற்று மிகவும் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. “நாங்கள் உம்மி சமூகமாகும்.நாங்கள் எழுதவும் மாட்டோம் கணக்கிடவும் மாட்டோம்......(புகாரி,முஸ்லிம்)
இங்கு உபயோகிக்கப்பட்டிருக்கும் யஹ்சுபு எனும் வார்த்தை கணக்கிடுதல் அல்லது கணித்தலைக் குறிக்கும். வானியல் துறை புதிதாக காணப்படும் ஒன்று அல்ல.அது நபிகளாரின் காலத்திலேயே தெரியப்பட்ட ஒன்றாக இருந்தது என்பது “நாங்கள் கணிக்கமாட்டோம்” எனும் நபிகளரின் கூற்றிலிருந்தே தெரிகிறது.
இந்த ஹதீதையும் இன்னும் பல ஹதீத்களை அடிப்படையாக வைத்து இவ்விடயம் சம்பந்தமாக இஸ்லாமிய அறிஞர்கள் கூறிய கருத்துக்களை பிக்ஹ் நூல்களில் படித்தறியலாம்.அவர்களின் ஒரு சிலரின் கருத்துகள் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
நோன்பின் ஆரம்பத்தையும் முடிவையும் தீர்மானிக்க வானியல் கணிக்கையை
பின்பற்றக் கூடாது என்பதில் அனைத்து அறிஞர்களும் ஒன்றுபட்டுள்ளனர் ( இமாம்
இப்ன் தைமியா, மஜ்மஊ பதாவா (25/132,133)"
“அல் பாஜி குறிப்பிடுகின்றார்”கணிப்பின்
தங்கியிருக்க்க் கூடாது என்பதே ஸலபுகளின் ஏகோபித்த கருத்தாகும்.அதனையே
பின்னர் வருபவர்களும் பின்பற்ற வேண்டும் (ஹாபிஸ் இப்ன் ஹஜர்,பத்ஹுல் பாரி
(4/127)” “கணிப்பின் அடிப்படையில் புதிய சந்திரனைக் கணக்கிடும்
விடயத்தினையும்,குரான் சுன்னாவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையும் இது
சம்பந்தமான அறிஞர்களின் கருத்துக்களையும் சபை ஆராய்ந்தது,இஸ்லாமிய
விடயங்கள் சம்பந்தமாக வானியல் கணிப்பீட்டுக்கு எந்த இடமும் இல்லை என சபை
ஒரு மனதாகத் தீர்மானித்திருக்கிறது” (சவுதி அரேபியாவின் சிரேஷ்ட
அறிஞர்களின் பத்வாக் குழு)
“வணக்கங்களைத் தீர்மானிக்க பிறையைப் பார்க்காமல் சந்திரமாதத்தினைக் கணிப்பது பித்ஆவாகும்.அதில்எந்த நன்மையும் இல்லை.ஷரீஅத்தில் அதற்கு எந்த இடமும் இல்லை –(ஷெய்க் உதைமீன்)
வானியலின் அடித்தளத்தையிட்டவர்கள் முஸ்லீம்கள்தான்.வானியல் கணிப்பின் அடிப்படையில் பிறை காண இயலுமான ஒரு காலத்தில்தான் இஸ்லாமியப் பேரறிஞர்கள் பிறையைக் கண்ணால் காண வேண்டும்.கணிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர். டாக்டர் ஆக்கில் சொல்வதுபோல் வானியல் கணிப்பீடு நூற்றுக்கு நூறு வீதம் சரி என்றிருந்தாலும் கூட இஸ்லாத்தில் அது தடுக்கப்பட்டிருந்தால் அதனை நாம் பின்பற்றுவதற்கு அனுமதி கிடையாது.
ஒன்று இரண்டு சாட்சியல்ல இருபதுக்கும் மேற்பட்ட சாட்சிகளை வைத்து கிண்ணியா முழுவதும் கிண்ணியா ஜம்மியதுல் உலமாவின் ஆசீர்வாதத்தோடு பெருநாள் கொண்டாடும்பொழுது வானியல் கணிப்பின் அடிப்படையில் நம்பத்தகுந்த சாட்சிகளை நிராகரிப்பதென்பது எந்தவகையில் சரியானது?
இலங்கையில் அந்நாளில் பிறை காணமுடியாது என்றிருந்தால் கணிப்பின் அடிப்படையில் மலேசியாவிலும் இந்தோநேசியாவிலும் கூட காணமுடியாது.ஆனால் அந்நாட்டு மக்கள் பிறையைக் கண்டுதான் வியாழன்னறு பெருநாள் கொண்டாடியிருக்கிறார்கள்.அவ்வாறென்றால்
கணிப்பின் அடிப்படையில் பிறையைக் காண முடியாத மலேசிய மக்கள் கண்டதாகப்
பெருநாள் கொண்டாடியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் அனைவரும் பொய்யர்களாகப்
போய்விடுவார்கள்.
புதனிரவு பிறை இலங்கை வானில் பிறை தென்படாது என்றால் ஏன் உலமாசபை அதனைப் பார்க்குமாறு மக்களை ஏவியது?
ஜம்மிய்யதுல் உலமாவின் பிறைக்குழுவுக்கு உதவியாக இருக்கும் அந்த இலங்கை ஆய்வாளர்கள் யார்?அவர்களின் தகுதிகள் என்ன?அவர்கள் தங்களின் கருத்துக்களை எங்கிருந்து பெறுகிறார்கள்?
Mycop/ Accurate times’ போன்ற சொப்ட்வெயார்களை வைத்துக் கொண்டு யாரும் செய்யக்கூடிய கணிப்பைச் செய்து கருத்து வெளியிடுபவர்களை வானியல் ஆய்வாளர்கள் என்று கூறலாமா?
குறைகளும், பலவீனமும் உள்ள மனிதர்களால் உருவாக்கப்பட்ட சொப்ட்வெயார்களை வைத்துக்கொண்டு இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்ட முஸ்லீம்களின் சாட்சிகளை மறுப்பதற்கு இஸ்லாத்தில் இடம் இல்லை. சாட்சிகளிடம் வானில் எவ்வளவு நேரம் பிறையிருந்தது போன்ற பல கேள்விகளை துருவித் துருவி விசாரித்ததன் காரணம் வானியல் கணிப்பின் அடிப்படையில் பிறை காண முடியாது என்பதே என ஹாஷிம் நூரியவர்கள் பின்வருமாறு கூறினார்.
“இடத்திலே நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.எவர் பிறை கண்டாலும் எவ்வளவு துல்லியமாக நாங்கள் சாட்சியை கோட்டில் விசாரிக்கின்ற மாதிரி விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னாலும் நாங்கள் விசாரிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்குள் இருக்கிறோம் என்னவென்றால் இந்த வானவியல் தரவுகள் இன்று காண முடியாது என்று சொல்கின்ற காரணத்தினால்....”
பிறை சம்பந்தமான முடிவுகளைத் தீர்மானிக்கையில் வானில் பிறை எவ்வளவு நேரம் இருந்தது என்ற அறிந்து கொள்ளவேண்டுமா என ஷெய்க் உதைமீனிடம் கேட்கப்பட்ட போது அவர் பின்வருமாறு கூறுகிறார்.
“சஹ்பானின் அல்லது ரமழானின் முப்பதாவது இரவில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் நம்பத்தகுந்த ஒருவரால் பிறை காணப்படுமிடத்து சூரிய மறைவுக்குப் பின்னர் சந்திரன் எவ்வளவு நேரம் வானில் இருந்தது என்பதனை,அது இருபது நிமிடமோ அல்லது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ என்பதைக் கணக்கிலெடுக்காமல் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதை நபிகளாரிடமிருந்து வரும் ஆதாரமான ஹதீத் தெளிவுபடுத்துகிறது.சூரியன் மறைந்ததன் பின்னர் உதிக்கும் சந்திரன் மறைவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என சஹீஹான ஹதீத்கள் குறிப்பிடவில்லை.
மேலும் நம்பிக்கையான,ஏற்றுக்கொள்ளக்கூடிய
ஒருவரால் பார்க்கப்பட்ட பிறையின் சாட்சியம் நோன்பு கடமையாவதற்குப்
போதுமானது என்பது இப்ன் உமர் அறிவிக்கும் ஹதீதில் இருந்து தெளிவாகிறது.
இப்ன் உமர் அறிவிக்கிறார்கள் “மக்கள் சந்திரனைப் பார்க்க வெளிச்
சென்றார்கள்.பிறையைக் கண்டதாக நபியவர்களிடம் கூறிய போது அன்னார் நோன்பு
பிடித்ததோடு மக்களையும் பிடிக்குமாறு ஏவினார்கள்.(அபூ தாவூத்)” (பதாவா அல்
லஜ்னா அல் தாயிமா 10/91)”
இதனைப் பற்றிய ஒரு ஹதீதுக்கு விளக்கமளிக்கையில் இமாம் அல்பானி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“எனவே நபியவர்கள் இந்த மனிதனின் சாட்சியத்தை அவர் யாரென்று தெரியாத நிலையில் வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் அன்றி வேறில்லை நபிகளார் அவனின் தூதர் எனும் கலிமாவினை அவர் மொழிந்ததை அடிப்படையாக வைத்து ஏற்றிருக்கிறார்கள்.அவர் முஸ்லிம் என்று நபிகளாருக்குத் தெரிந்திருந்தது.அதற்கு அதிகமாக அவரைப் பற்றி நபிகளார் விசாரிக்கவில்லை.அவர் எவ்வளவு அறிவாளி என்றொ புத்திசாலியென்றோ விசாரிக்கவில்லை”(அத் தலாக் அலா கிதாப் புலூகுல் மறாம்-ஒலி நாடா- ஹதீத் இல.5,கிதாபுஸ் ஸியாம்)
இதனடிப்படையில் பிறை கண்டதாக நம்பத்தகுந்த சாட்சியங்களின் சாட்சிகளை அனாவசியமான கேள்விகள் இல்லாமல் ஏற்றுக் கொள்வதே நபிவழி.ஒரு சில பெயர் தெரியாத இலங்கை வானியல் ஆய்வாளர்களின் கருத்தினை பெரிதாக எடுத்து பல சாட்சிகளிடம் துருவித்துருவி கேள்வி கேட்டிருக்கிறார்கள்.ஆக பல முஸ்லீம்களின் ஏன் ஒரு ஊரின் சாட்சியத்தைவிட இவர்களுக்கு ஒரு சொப்ட்வெயார் பெரிதாகப்போய்விட்டது.
டாக்டர் ஆக்கில் அஹமதின் கட்டுரையில் தான் சாட்சிகளிடம் பேசியதாகவும் தான் மஹ்ரிப் தொழுகையை முடித்துக் கொண்டு வரும் போது பிறையைக் கண்டதாக ஜுஹார்டீன் எனும் சாட்சி கூறியதாகக் குறிப்பிட்டிருந்தார்.அவர் அச்சாட்சியின் தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்திருந்தார்.அச்சாட்சியை
நாம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது தான் மஹ்ரிப் தொழுகைக்குப் போகும்
வழியிலேயே பிறையைக் கண்டதாகவும் தொழுகையில் இருந்து வரும் போது கண்டதாகக்
கூறவில்லை எனவும் கூறினார்.விரும்பியவர்கள் அவரைத் தொடர்பு கொண்டு(
0752641313) கேட்க முடியும்.ஆக்கில் அவர்களின் கருத்துப் பிழையானது
என்பதற்கு இதுவே போதுமானதாகும்.
இதன் அடிப்படையில் ஜம்மியதுல் உலமா வானியல் கணிப்பின் அடிப்படையில் எடுத்த முடிவு பிழையானது,அது ஷரீஆவிற்கு எதிரானது என்பது தெளிவாகிறது.விஞ்ஞானத்தைக் கற்ற ஆக்கில் டாக்டர் அவர்கள் சற்று ஷரிஆவையும் கற்குமாறு நான் அன்பாக வேண்டிக்கொள்கின்றேன்.அல்லாஹுவே நன்கறிந்தவன் நபிகளாரின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
1.இம்முறை ஷவ்வால் பிறைக் கணிப்பு வானியல் தரவுகளை அடிப்படையாக வைத்து உலமா சபையினரால் எடுக்கப்பட்டதா? அல்லது சாட்சிகள் போதாமையினால் நிராகரிக்கபட்டதா?
2.கண்ணால் கண்ட சாட்சியங்களை வானியல் தரவுகளைக் காரணம் காட்டி நிராகரிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
2.கண்ணால் பிறையைக் கண்டதாக நம்பத்தகுந்த சாட்சிகள் கூறுமிடத்து அவர்களிடம் வானியல் காரணங்களுக்காக துருவித் துருவு கேள்விகள் கேட்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
மேற்கூறப்பட்ட கேள்விகளின் ஒளியில் நாம் இப்பிரச்சினையை ஆராய்வோம். சென்ற புதன் இரவு (2013.8.7) இரவு ஜம்மியதுல் உலமாவின் பிறை சம்பந்தமான முடிவு முடிவினை உத்தியோக பூர்வமாக அறிவித்தது.அதனைத்தொடர்ந்து
புதனிரவு பேட்டியளித்த உலம்மா சபையின் பத்வாக்குழு செயலாளர் ஹாஷிம் நூரியவர்கள் அவர்கள் பின்வருமாறு கூறினார், ‘’ அதாவது பிறை காணும் விடயத்தில் ஐந்து வகையான அடிப்படைகள் எங்களிடத்திலே இருகின்றது.அந்த அடிப்படைகளில் ஒன்று என்னவென்றால் பிறை காணச் சாத்தியம் இல்லை என்று நம்பகமான முஸ்லீம் வானவியல் அறிஞர்கள் சொல்லுமிடத்து அந்தச் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்ற ஒரு அடிப்படையும் எம்மிடத்திலே இருக்கின்றது.அந்த அடிப்படையை மையமாக வைத்து இந்த வானவியல் தரவையும் மையமாக வைத்து வந்த சாட்சியங்கள் எமக்கு உரிய முறையில் போதாததாக இருக்கின்ற காரணத்தினால் நாளை நோன்பைப் பூர்த்தியாக்குவதுதான் ஜம்மியதுல் உலமா வந்திருக்கின்றது என்ற செய்தியைச் சொல்வதோடு என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை மேலும் றிஸ்வி முப்தியவர்களின் பேச்சு உறுதி செய்கின்றது.
“அவர்களுடைய தீர்மானத்தின் படி ...உலகத்தில அதிகமான பகுதிகள்ல இது வெற்றுக் கண்ணால பார்க்கக் கூடிய சாத்தியம் இல்ல.அதுவும் பதினாலு நிமிஷத்தில அதுவும் பார்க்கக்கூடிய சாத்தியம்...The crescent moon will be easily visible by naked eyes in the southern part of chili and Argtina.it will not be visible by naked eyes in the most of the world……..சில இந்த அடிப்படைகளை வைத்து இவர்கள் கண்டது ஏற்றுக்கொள்ள முடியாது”
அவர்களின் இந்த இரண்டு பேச்சுகளில் இருந்து ஜம்மியதுல் உலமாவின் பிறைக்குழு ஆய்வாளர் டாக்டர் ஆக்கில் அஹமத் ஷரிப்தீனின் கட்டுரையில் இருந்தும், இம்முறை ஷவ்வால் பிறையைக் கண்டதாக கிண்ணியாவில் இருந்து கூறிய நம்பத்தகுந்த முஸ்லீம் சகோதரர்களின் சாட்சியத்தை வானிவியல் அறிஞர்கள் அந்த நாளில் பிறை காண முடியாது என்று கூறியிருக்கின்ற காரணத்தினால் அவர்கள் நம்பத்தகுந்த சாட்சியங்களாக இருந்தும் அவர்களின் சாட்சியங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பதோடு அதே வானியல் காரணியை அடிப்படையாக வைத்துத்தான் அச்சாட்சியங்கள் துருவித்துருவி விசாரிக்கப்பட்டுமிருக்கின்
ஆரம்பகால அனைத்து இஸ்லாமியப் பேரறிஞர்கள் ஒன்று பட்டு ஏற்றுக் கொண்ட விடயம்தான் வானியல் கணிப்பினைப் பின்பற்றுவது கூடாது என்பதாகும்.இதனை நபிகளாரின் பின்வரும் கூற்று மிகவும் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. “நாங்கள் உம்மி சமூகமாகும்.நாங்கள் எழுதவும் மாட்டோம் கணக்கிடவும் மாட்டோம்......(புகாரி,முஸ்
இங்கு உபயோகிக்கப்பட்டிருக்கும் யஹ்சுபு எனும் வார்த்தை கணக்கிடுதல் அல்லது கணித்தலைக் குறிக்கும். வானியல் துறை புதிதாக காணப்படும் ஒன்று அல்ல.அது நபிகளாரின் காலத்திலேயே தெரியப்பட்ட ஒன்றாக இருந்தது என்பது “நாங்கள் கணிக்கமாட்டோம்” எனும் நபிகளரின் கூற்றிலிருந்தே தெரிகிறது.
இந்த ஹதீதையும் இன்னும் பல ஹதீத்களை அடிப்படையாக வைத்து இவ்விடயம் சம்பந்தமாக இஸ்லாமிய அறிஞர்கள் கூறிய கருத்துக்களை பிக்ஹ் நூல்களில் படித்தறியலாம்.அவர்களின் ஒரு சிலரின் கருத்துகள் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கின்றன
“அல் பாஜி குறிப்பிடுகின்றார்”கணிப்பி
“வணக்கங்களைத் தீர்மானிக்க பிறையைப் பார்க்காமல் சந்திரமாதத்தினைக் கணிப்பது பித்ஆவாகும்.அதில்எந்த நன்மையும் இல்லை.ஷரீஅத்தில் அதற்கு எந்த இடமும் இல்லை –(ஷெய்க் உதைமீன்)
வானியலின் அடித்தளத்தையிட்டவர்கள் முஸ்லீம்கள்தான்.வானியல் கணிப்பின் அடிப்படையில் பிறை காண இயலுமான ஒரு காலத்தில்தான் இஸ்லாமியப் பேரறிஞர்கள் பிறையைக் கண்ணால் காண வேண்டும்.கணிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர். டாக்டர் ஆக்கில் சொல்வதுபோல் வானியல் கணிப்பீடு நூற்றுக்கு நூறு வீதம் சரி என்றிருந்தாலும் கூட இஸ்லாத்தில் அது தடுக்கப்பட்டிருந்தால் அதனை நாம் பின்பற்றுவதற்கு அனுமதி கிடையாது.
ஒன்று இரண்டு சாட்சியல்ல இருபதுக்கும் மேற்பட்ட சாட்சிகளை வைத்து கிண்ணியா முழுவதும் கிண்ணியா ஜம்மியதுல் உலமாவின் ஆசீர்வாதத்தோடு பெருநாள் கொண்டாடும்பொழுது வானியல் கணிப்பின் அடிப்படையில் நம்பத்தகுந்த சாட்சிகளை நிராகரிப்பதென்பது எந்தவகையில் சரியானது?
இலங்கையில் அந்நாளில் பிறை காணமுடியாது என்றிருந்தால் கணிப்பின் அடிப்படையில் மலேசியாவிலும் இந்தோநேசியாவிலும் கூட காணமுடியாது.ஆனால் அந்நாட்டு மக்கள் பிறையைக் கண்டுதான் வியாழன்னறு பெருநாள் கொண்டாடியிருக்கிறார்கள்.அவ
புதனிரவு பிறை இலங்கை வானில் பிறை தென்படாது என்றால் ஏன் உலமாசபை அதனைப் பார்க்குமாறு மக்களை ஏவியது?
ஜம்மிய்யதுல் உலமாவின் பிறைக்குழுவுக்கு உதவியாக இருக்கும் அந்த இலங்கை ஆய்வாளர்கள் யார்?அவர்களின் தகுதிகள் என்ன?அவர்கள் தங்களின் கருத்துக்களை எங்கிருந்து பெறுகிறார்கள்?
Mycop/ Accurate times’ போன்ற சொப்ட்வெயார்களை வைத்துக் கொண்டு யாரும் செய்யக்கூடிய கணிப்பைச் செய்து கருத்து வெளியிடுபவர்களை வானியல் ஆய்வாளர்கள் என்று கூறலாமா?
குறைகளும், பலவீனமும் உள்ள மனிதர்களால் உருவாக்கப்பட்ட சொப்ட்வெயார்களை வைத்துக்கொண்டு இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்ட முஸ்லீம்களின் சாட்சிகளை மறுப்பதற்கு இஸ்லாத்தில் இடம் இல்லை. சாட்சிகளிடம் வானில் எவ்வளவு நேரம் பிறையிருந்தது போன்ற பல கேள்விகளை துருவித் துருவி விசாரித்ததன் காரணம் வானியல் கணிப்பின் அடிப்படையில் பிறை காண முடியாது என்பதே என ஹாஷிம் நூரியவர்கள் பின்வருமாறு கூறினார்.
“இடத்திலே நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.எவர் பிறை கண்டாலும் எவ்வளவு துல்லியமாக நாங்கள் சாட்சியை கோட்டில் விசாரிக்கின்ற மாதிரி விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னாலும் நாங்கள் விசாரிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்குள் இருக்கிறோம் என்னவென்றால் இந்த வானவியல் தரவுகள் இன்று காண முடியாது என்று சொல்கின்ற காரணத்தினால்....”
பிறை சம்பந்தமான முடிவுகளைத் தீர்மானிக்கையில் வானில் பிறை எவ்வளவு நேரம் இருந்தது என்ற அறிந்து கொள்ளவேண்டுமா என ஷெய்க் உதைமீனிடம் கேட்கப்பட்ட போது அவர் பின்வருமாறு கூறுகிறார்.
“சஹ்பானின் அல்லது ரமழானின் முப்பதாவது இரவில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் நம்பத்தகுந்த ஒருவரால் பிறை காணப்படுமிடத்து சூரிய மறைவுக்குப் பின்னர் சந்திரன் எவ்வளவு நேரம் வானில் இருந்தது என்பதனை,அது இருபது நிமிடமோ அல்லது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ என்பதைக் கணக்கிலெடுக்காமல் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதை நபிகளாரிடமிருந்து வரும் ஆதாரமான ஹதீத் தெளிவுபடுத்துகிறது.சூரியன்
மேலும் நம்பிக்கையான,ஏற்றுக்கொள்ளக
இதனைப் பற்றிய ஒரு ஹதீதுக்கு விளக்கமளிக்கையில் இமாம் அல்பானி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“எனவே நபியவர்கள் இந்த மனிதனின் சாட்சியத்தை அவர் யாரென்று தெரியாத நிலையில் வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் அன்றி வேறில்லை நபிகளார் அவனின் தூதர் எனும் கலிமாவினை அவர் மொழிந்ததை அடிப்படையாக வைத்து ஏற்றிருக்கிறார்கள்.அவர் முஸ்லிம் என்று நபிகளாருக்குத் தெரிந்திருந்தது.அதற்கு அதிகமாக அவரைப் பற்றி நபிகளார் விசாரிக்கவில்லை.அவர் எவ்வளவு அறிவாளி என்றொ புத்திசாலியென்றோ விசாரிக்கவில்லை”(அத் தலாக் அலா கிதாப் புலூகுல் மறாம்-ஒலி நாடா- ஹதீத் இல.5,கிதாபுஸ் ஸியாம்)
இதனடிப்படையில் பிறை கண்டதாக நம்பத்தகுந்த சாட்சியங்களின் சாட்சிகளை அனாவசியமான கேள்விகள் இல்லாமல் ஏற்றுக் கொள்வதே நபிவழி.ஒரு சில பெயர் தெரியாத இலங்கை வானியல் ஆய்வாளர்களின் கருத்தினை பெரிதாக எடுத்து பல சாட்சிகளிடம் துருவித்துருவி கேள்வி கேட்டிருக்கிறார்கள்.ஆக பல முஸ்லீம்களின் ஏன் ஒரு ஊரின் சாட்சியத்தைவிட இவர்களுக்கு ஒரு சொப்ட்வெயார் பெரிதாகப்போய்விட்டது.
டாக்டர் ஆக்கில் அஹமதின் கட்டுரையில் தான் சாட்சிகளிடம் பேசியதாகவும் தான் மஹ்ரிப் தொழுகையை முடித்துக் கொண்டு வரும் போது பிறையைக் கண்டதாக ஜுஹார்டீன் எனும் சாட்சி கூறியதாகக் குறிப்பிட்டிருந்தார்.அவர் அச்சாட்சியின் தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்திருந்தார்.அச்சாட்சி
இதன் அடிப்படையில் ஜம்மியதுல் உலமா வானியல் கணிப்பின் அடிப்படையில் எடுத்த முடிவு பிழையானது,அது ஷரீஆவிற்கு எதிரானது என்பது தெளிவாகிறது.விஞ்ஞானத்தைக் கற்ற ஆக்கில் டாக்டர் அவர்கள் சற்று ஷரிஆவையும் கற்குமாறு நான் அன்பாக வேண்டிக்கொள்கின்றேன்.அல்லா
0 கருத்துகள்: