கிராண்ட்பாஸ் சம்பவம் தொடர்பில் கருத்து ெவளியிட்ட ஆளும்கட்சியின் எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் கூறுகையில்,
பள்ளிவால்களை பாதுகாக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும்!!!!!!!!!!!
பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கு எவருக்கும் அதிகாரம்
கிடையாது. அதேபோன்று அதற்கான அதிகாரத்தை எவராலும் வழங்கவும் முடியாது.
எனினும் கிராண்ட்பாஸ் சம்பவம் தொடர்பில் நாம் கவலையையும் கண்டத்தையும்
தெரிவிக்கின்றோம். மேலும் கிராண்ட்பாஸ் சம்பவத்தையடுத்து பாதுகாப்பு
தரப்பினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்காவிட்டால் அங்கு விபரீத
நிலையொன்றுக்கு வழிவகுத்திருக்கும் என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,
குறித்த பள்ளிவாசலானது நோன்பு பெருநாள் நிறைவு பெற்றதன் பின்னர்
மூடப்படும் என்றே முதலில் கூறப்பட்டிருந்தது. எனினும் இவ்விடயம் தொடர்பில்
இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பள்ளிவாசலை மூடுவதற்கான தேவை இல்லையென
தெரிவிக்கப்பட்டதையடுத்து குழப்பம் எழுந்துள்ளது. பள்ளிவால்களை பாதுகாக்க
வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும். அதனை நாம் செய்துவருகின்றோம்.
அதேவேளை, பாதுகாப்பு தரப்பினரும் இதில் கடமைகளை சரிவர செய்ய வேண்டும்.
இஃதிகாப் என்ற வழிபாட்டு முறையானது பள்ளிவாசலில் மட்டுமே சாத்தியமாகும்.
அதனை வெளியில் செய்ய முடியாது. இதன்மூலம் பள்ளிவாசலில் முக்கியத்துவம்
விளங்கப்பட வேண்டும். அது மாத்திரமின்றி பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை
நடத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது என்பது போல் அதற்கான அதிகாரத்தை
வழங்குவதற்கும் யாருக்கும் உரிமைகிடையாது.
எனவே,
இவ்விடயங்களில் அரசாங்கம் இறுதியானதோ முடிவினை எடுக்க வேண்டிய கட்டத்தில்
இருக்கின்றது. கிராண்ட்பாஸ் சம்பவத்தையடுத்து ஜனாதிபதி நேரடி தலையீடுகளை
மேற்கொண்டிருந்தமை வரவேற்றக் கூடியதாகும். இது இவ்வாறிருக்க இலங்கையில்
நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் முஸ்லிம் நாடுகள் பங்கேற்பதை
தடுப்பதற்காகவே சில தீய சக்திகள் செயற்பட்டு வருகின்றன. இதனையும் ஆராய்ந்து
அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.
0 கருத்துகள்: