பொது
பல சேனாவினால் 11-08-2013 குருநாகல் நகரில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டம்
தோல்வியில் முடிவடைந்துள்ளது பல இலட்சக் கணக்கில் செலவு செய்து விளம்பரம்
செய்த இந்தக் கூட்டத்திற்கு சுமார் 500 பேர் அளவில் சிங்கள மக்கள்
சமூகமளித்திருந்தனர்.
பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் இங்கு உரை நிகழ்த்துகையில்,
கிராண்பாஸ் பள்ளி உடைப்புக்கும் தமக்கு எந்த சம்மந்தமும் இல்லை எனச்
சுட்டிக் காட்டியதுடன் முஸ்லிம்களை தீண்டத் தகாத சொல்லாக கண்டி குருநாகல்
வீதியில் பறகஹதெனிய பள்ளிவாசலுக்கு முன்னால் அமைதியாகச் செல்லுங்கள் என்று
விளம்பரப் பதாதையை அகற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் அதனை
அகற்றாவிட்டால் தாங்கள் அகற்ற வேண்டி வரும் எனவும் அங்கு
குறிப்பிட்டுள்ளார்.
இந்த விளம்பரப் பலகை இரு பள்ளவாசல்களுக்கு
முன்னால் போடப்பட்டுள்ளது. இது இரு பள்ளிவாசல்களின் நிர்வாக சபையினர்
போடவில்லை. வீதி போக்குவரத்துப் பிரிவினால் போடப்பட்ட ஒன்று.
இந்தக் கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு முஸ்லிம் மக்களிடத்தில் இன்று
குருநாகல் நகருக்கு முஸ்லிம்கள் எவரும் வரவேண்டாம் என்ற கையடக்கத் தொலைபேசி
மூலமாக SMS தகல்கள் அனுப்பப்ட்டன. அதனைப் பொறுப்படுத்தாது பெருந்தொகாயான
முஸ்லிம் குருநாகல் நகர் வந்திருந்தார்கள்.
இந்தக் கூட்டம்
தொடாபாக முஸ்லிம்களுக்கு மத்தியில் ஆரம்பத்தில் நிலவிய ஆச்ச நிலையைப்
போக்குவதற்காக குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல்
சத்தார் பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தது மட்டுல்ல இக்
கூட்டம் முடியுவரை பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு எந்தவிதமான
அசம்பாவிதங்களும் ஏற்படாமல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவற்காக
துணைநின்றுள்ளார்.
இந்தக் கூட்டத்தைப் பார்ப்பதற்காக
முஸ்லிம்களும் அங்கு சென்றுள்ளதுடன் அவர்களது உரையை ஒலி பெருக்கியின்
மூலம் கேட்டுக் கொண்டிருந்தனர்.
0 கருத்துகள்: