மாவத்தகம
பொலிஸ் பிரிவில் கண்டி குருநாகல் பிரதான வீதியில் அமைந்துள்ள இரு
பள்ளிவாசல்களுக்கு முன்னால் அமைதியாகச் செல்லவும் என்று போடப்பட்டுள்ள
விளம்பரப் பதாதையை மாவத்தகம பொலிஸார் இன்று 12-08-2013 மு.ப 10. மணி அளவில்
அகற்றுவதற்காக வருகை தந்து அகற்ற முற்பட்ட போது ஊர் மக்களுக்கும் மற்றும்
பொலிஸாருக்குமிடையே கருத்து முரண்பாடுகள் இடம் பெற்றதுடன் பிரதேசத்தில் ஒரு
பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பொது
பல சேனாவினால் குருநாகல் நகரில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டம் நேற்று
நடைபெற்றது. அக் கூட்டத்தில் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த
ஞான தேரர் அங்கு உரை நிகழ்த்துகையில் முஸ்லிம்களை தீண்டத் தகாத
வார்த்தைகளால் பறகஹதெனிய முஸ்லிம் மக்களை மிகக் கேலவமாகச் சீண்டிப்
பேசியதுடன் கண்டி குருநாகல் வீதியில் பறகஹதெனிய பள்ளிவாசலுக்கு முன்னால்
அமைதியாகச் செல்லுங்கள் என்று விளம்பரப் பதாதையை அகற்றுமாறு வேண்டுகோள்
விடுத்ததுடன் அதனை அகற்றா விட்டால் தாங்கள் அகற்ற வேண்டி வரும் எனவும்
அங்கு அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அவர் நேற்றுக் கூறிய
வார்த்தைக்கு ஏற்ப இன்று இந்த விளம்பரப் பலகையை அகற்றுவதற்காக மாவத்தகம
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில் பொலிஸார் வருகை தந்து அதனை
அகற்ற முற்பட்ட போது ஊர் மக்கள் ஒன்று திரண்டு அதனைத் தடுத்து நிறுத்தினர்.
பறஹகதெனிய பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் , ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசல்
ஆகிய இரு பள்ளிவாசல்களுக்கு முன்னாலே இந்த இரு விளம்பரப் பதாதைகள்
போடப்பட்டுள்ளன. இவ்விரு பள்ளிவாசல்கள் ஒன்று சேர்ந்து நீதி மன்றத்தின்
சட்ட ரீதியான ஆணையுடன் வந்தால் இதனைக் அகற்றுவதற்கு நாங்கள் அனுமதிப்போம்
என்று கூறி இதனை அகற்றவிடாது பொது மக்கள் கருத்து முரண்பாடுகளில்
ஈடுபட்டனர்.
இந்த விளம்பரப் பதாதையை இரு பள்ளிவாசல்களுக்கு
முன்னால் நிர்வாக சபையினர் போடவில்லை. வீதி போக்குவரத்துப் பிரிவினால்
போடப்பட்ட ஒன்று. இவ்விளம்பரப் பலகையை போடுவதற்காக நெடுஞ்சாலைகள்
போக்குவரத்து அதிகார சபை 22000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊர்
மக்கள் பொலிஸாரிடம் தெளிவுபடுத்தினர். இதனைத் தொடர்ந்து இவ்விடத்தற்கு
அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல நூற்றுக் கணக்கான மக்கள் திரண்டு
விட்டனர்.
0 கருத்துகள்: