இந்த
வருடம் சவூதி அரபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள தஃவா நிலையங்களின் ஊடாக
708 வெளிநாட்டு வேலையாளர்கள் இஸ்லாத்தை ஏற்று அதனை தமது மார்க்கமாகவும்
வாழ்வு முறையாகவும் தெரிவு செய்துள்ளனர்.
இதில் விசேடமாக 146
இலங்கையை சேர்ந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அத்துடன் 136
பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், 392 எத்தியோப்பியா நாட்டவர்கள், 29 ஐரோப்பிய
மற்றும் அமெரிக்கவர்கள், 5 இந்தியர்கள் அடங்குவதாக நேற்று திங்கள் கிழமை
சவூதி பிரஸ் அஜென்ஷி செய்தி வெளியிடுள்ளது.
தஃவா நிலையங்களின் ஊடாக இந்த வருடம் பல்வேறு மொழிகளில் 1,118 இஸ்லாமிய
விரிவுரை வகுப்புகள் நடைபெற்றுள்ளதோடு, 68,000 புனித அல்-குர்ஆன் பிரதிகள்
மற்றும் 545,000 இஸ்லாமிய விரிவுரை புத்தகங்கள் பல்வேறு மொழிகளில்
விநியோகிக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்! எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவன் போதுமானவன்.
0 கருத்துகள்: