ஜமாத்தேஇஸ்லாமியின்தந்திரநாடகம்அம்பலம் ஜமாத்தே இஸ்லாமி மிகவுமே தந்திரமான ஒரு இயக்கம் ஆகும். வழமையாகவே தலைமத்துவத்திட்கு கட்டுப்படல் வேண்டும் ஒற்றுமை வேண்டும் என்று பேசும் ஒரு இயக்கம்.

ஜமாத்தே இஸ்லாமி என்று ஒரு இயக்கம் இருப்பது கூட ஒரு பிரிவினை என்பதும் ஜமாத்தே இஸ்லாமி என்று ஒரு இயக்கத்தை உருவாக்கியதால் ஒற்றுமை பாதிக்கப் பட்டுள்ளது பற்றியும் அவர்கள் பேசுவதில்லை.

இப்பொழுது அவர்களின் பார்வை ரிஸ்வி முப்தியை பலிக்கடா ஆக்குவதில் திரும்பியுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உலமா சபைக்கான தலைவர் தெரிவு இடம்பெற்ற பொழுதுஇ ஜமாத்தே இஸ்லாமைக்கு ஆதரவான தலைமையை ஏற்படுத்த ஜமாத்தே இஸ்லாமி திட்டம் போட்டு இருந்தது. என்றாலும் அந்த வாய்ப்பை தப்லீக் முக்கிய உறுப்பினரான ரிஸ்வி முப்தி தட்டிப் பறித்து விட்டார்.

தலைமைத் துவத்திட்குக் கட்டுப்படல் வேண்டும்இ தலைவர் சொல்லுவதைக் கேட்க வேண்டும் என்று ஜமாத்தே இஸ்லாமி பிரச்சாரகர்கள் நாக்கு வறள வறள கடுமையாக பிரச்சாரம் செய்வார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு.

ஒற்றுமை தலைமைத்துவம் என்று பேசினால்இ பெரிய முதலீடுகள் இல்லாமல் படித்தவர்களை தமது பக்கம் இழுத்துக் கொள்ள முடியும்..

இந்த இயக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் விண்வெளி வீண்-ஜானி டாக்ரர். அகில் அஹமத் போல தாம் படித்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பதால்இ சமுதாயம் எனும் வாகனம் பழுதடையும் பொழுதுஇ கீழே சேற்றில் இறங்கி வாகனத்தை தள்ளி ஸ்டார்ட் பண்ண வேண்டிய இக்கட்டான நேரத்தில் கூட நாம் படித்தவர்கள்இ உடுப்பில் ஊத்தை பட்டுவிடும் என்று தள்ளுபவர்களுக்கும் பாரமாக வாகனத்திற்கு உள்ளேயே உட்கார்ந்துகொண்டுஇ தள்ளுபவர்களையும் குறை சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.

எல்லாம் முடிந்ததும் இரண்டு நாள் கழித்து ஆறுதலாக அறிக்கை வரும் இ அதில் வாகனத்தில் என்ன கோளாறுஇ எப்படி சரி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்இ இப்படிச் செய்திருக்கலாம்இ அப்படி செய்து இருக்கக் கூடாது என்ற அதி மேதாவித்தனமான ஆய்வுடன்இ தேவையில்லாமல் சில பேர் சேற்றில் இறங்கி வாகனத்தை தள்ளி விட்டார்கள்இஅவர்கள் மீண்டும் வாகனத்தில் ஏறிய பொழுது உள்ளே இருந்தவர்களுக்கும் சேற்று வாசத்தை சுவாசிக்க வைத்துவிட்டார்கள்இ சேற்றில் இறங்கியவர்கள் அறிவாளிகள் அல்ல என்பது போன்ற குற்றச் சாட்டுக்களும் அந்த அறிக்கையில் இருக்கும்.

ஏற்கனவே சொல்லி வைத்தது போல ஜமாத்தே இஸ்லாமி அங்கத்தவர்கள் 'அமீரின் அறிக்கை' இஅமீர் நல்ல சொன்னார்' என்று ஊர் முழுக்க பரப்புவார்கள்இ குடீ யில் பரப்புவார்கள்.

24 பள்ளிவாசல்கள் தக்கபப்ட்ட சந்தர்ப்பங்களிலும்இ பிறை தொடர்பான பிரச்சினையிலும் இதைத்தான் பார்த்தோம். கிராண்ட் பாஸ் விவகாரம் தொடர்பில் ஹஜ்ஜுல் அக்பரின் பெயரில் அதி மேதாவித்தனமான அறிக்கை இன்னும் வரவில்லைஇ விரைவில் வரலாம்.

மேலும் ஜமாத்தே இஸ்லாமி அடிக்கடி சொல்லும் விடயம் தலைமைக்கு கட்டுபப்டல் வேண்டும் என்பதாகும். ஜமியத்துல் உலமாவின் தலைமை 35 நாள் நோன்பு பிடிக்கச் சொன்னால் நீங்கள் 35 நோன்பு பிடிக்க வேண்டும் என்றெல்லாம் பயானில் சொன்னார்கள். இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் ரிஸ்வி முப்தியை உச்சிக் கொப்புக்கு ஏற்றினார்கள்.

சதி செய்ய சந்தர்ப்பம் பார்த்திருந்த ஜமாத்தே இஸ்லாமிக்குஇ கீழே மரத்தை வெட்டிஇ உச்சிக் கொப்பில் ஏற்றிய ரிஸ்வி முப்தியை கவிழ்க்கும் நேரம் வந்து விட்டது.

ரிஸ்வி முப்தி பிழையான தீர்வு எடுத்த பொழுது ஜமாத்தே இஸ்லாமிஇ அதனது அறிவாளிகளில் ஒருவரான விண்வெளி வீண்ஜானி டாக்டர். அகில் அஹமட் அவர்களை போலியாக உதவி செய்யும்படி கேட்டுஇ ரிஸ்வி முப்தியை உசுப்பேற்றி ரேடியோவில் பேச வைத்துஇ நம்ப வைத்து கழுத்தறுக்கும் வேலையை செய்கின்றது.

ஜமியத்துல் உலமாவின் தலைமைத்துவத்தை தமது இயக்கத்தின் கைகளுக்குள் கொண்டுவரும் சதித்திட்டத்தில் ஹஜ்ஜுல் அக்பர் களமிறங்கியுள்ளார்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ரிஸ்வி முப்தியின் தலைமைத்துவத்திற்கு எதிராக விசத்தை காக்க ஆரம்பித்து விட்டார்.

ஹஜ்ஜுல் அக்பரின் கைத்தொலைபேசி ழுகுகு பண்ணப்பட்ட மர்மம் என்ன?

ஹஜ்ஜுல் அக்பர்இ புதன்கிழமை இரவு பிறை தொடர்பான குழப்பம் ஏற்படவே தனது கைத்தொலைபேசியை ழுகுகு பண்ணி விட்டதாக குறிப்பிட்டுஇ அதற்கான காரணமாகஇ உலமா சபையின் முடிவு தொடர்பில் தனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லைஇ குட்டை குழம்பிவிட்டதுஇ ஜமியத்துல் உலமாவே பதில் சொல்லட்டும் என்று மொபைல் போனை ழுகுகு பண்ணினேன் என்று பொய்யை அவிழ்த்து விடுகின்றார்.

என்றாலும் வியாழக்கிழமை நோன்பு பிடிக்க வேண்டாம் தவ்ஹீத் காரர்களுடன் சேர்ந்து பெருநாள் தொழவும் வேண்டாம் என்கின்ற கட்டளை ஜமாத்தே இஸ்லாமியின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் இரகசியமாக தெரிவிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது எங்கே போனது தலைமைக்குக் கட்டுப்படும் பண்பு? 35 நாள் வேணுமானாலும் தலைமை சொன்னால் நோன்பு பிடிக்க வேண்டும் என்று சொன்னவர்கள் இரகசியமாக நோன்புக்கு லீவு எடுக்கின்றார்கள்.

ஜமியத்துல் உலமா பார்த்துக்கொள்ளட்டும் என்று போனை ழுகுகு பண்ணியிருந்தால்இ எதற்காக நோன்பு பிடிக்க வேண்டாம் என்று ஜமாத்தே இஸ்லாமி அங்கத்தவர்களுக்கு இரகசிய கட்டளை போட வேண்டும்?

மொபைல் போனை ழுகுகு பண்ணியதில் பின்னணியில் ஒரு சதி இருக்கின்றது. மிகவும் இக்கட்டான சூழ்நிலையில்இ ரிஸ்வி முப்தியோஇ அல்லது ஜமியத்துல் உலமாவோ இவரை தொடர்பு கொண்டு உதவி கேட்டால்இ உதவி செய்ய வேண்டி வந்துவிடுமே என்ற நல்ல நோக்கம்தான்.

போனை ழுகுகு பண்ணிவிட்டால்இ அவர்களை இக்கட்டில் விட்டுவிட்டு தான் தப்பிக் கொள்ளலாம் அல்லவா? ரிஸ்வி முப்தியை 'தலைவர்இ தலைமை' என்று உசுப்பேத்தி உச்சிக் கொப்புக்கு ஏற்றிய புத்திசாலிக்குஇ அவரை கவிழ்க்க தெரியாமலா போகும்.

இப்பொழுது சந்தர்ப்பம் வந்துவிட்டதுஇ இதுவரை காத்திருந்த சந்தர்ப்பம் வந்து விட்டதுஇ ரிஸ்வி முப்தியை கவிழ்த்துவிட்டுஇ ஜமாத்தே இஸ்லாமி உலமா சபையை கைப்பற்றிஇ அதன் மூலம் இயக்கத்தை வளர்க்க போட்டிருந்த நீண்டகால திட்டத்தை செயல்படுத்த களமிறங்கி விட்டது ஜமாத்தே இஸ்லாமி.

இந்நேரம்இ ஜமியத்துல் உலமாவின் அடுத்த கூட்டத்தில் எப்படி செயல்படுவதுஇ யார் யாரைப் பிரேரிப்பதுஇ யார் ஆமோதிப்பதுஇ யார் எதனைப் பேசுவது என்கின்ற விடயங்கள் எல்லாம் ஏற்கனவே ஒத்திகை பார்க்கபப்ட்டு முடிந்திருக்கும்.

ஆக அடுத்தஇ கட்டம்இ ரிஸ்வி முப்தியை கவிழ்ப்பதுதான். அதற்கான முக்கிய வழிகளில் ஒன்றுஇ தவ்ஹீத் ஜமாத்தினரை உசுப்பேற்றிஇ ரிஸ்வி முப்திக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்வது. இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதான் இன்னொரு தலைவலி ஆரம்பமானது.

ஆம்இ அதுதான் கிராண்ட்பாஸ் பிரச்சினை. தவ்ஹீத் ஜமாஅத் நேரடியாக களத்தில் இறங்கவேஇ ஜமாத்தே இஸ்லாமிக்குஇ பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு வந்த கதையாகி விட்டது.

தெமட்டகொடையில் தலைமையகத்தை வைத்துக் கொண்டு களத்தில் இறங்காத ஜமாத்தே இஸ்லாமிக்கு கிராண்ட்பாஸ் விவகாரம் காரணமாக தவ்ஹீத் ஜமாத்தின் வளர்ச்சி அதிகரித்து விட்டால் என்ன செய்வது என்ற தலை வலி வந்த நேரத்தில்தான்இ தப்லீக் - தவ்ஹீத் வேறுபாடு வெளிப்பட்டது ஆக தவ்ஹீத் - தப்லீக் என்ற வேறுபாட்டின் நெருப்பில் குளிர் காய ஜமாத்தே இஸ்லாமி தயாராகி விட்டது.

அதன் வெளிப்பாடுதான் தவ்ஹீத் ஜமாத்தை குறை சொல்லி வெளியாகும் ஜமாத்தே இஸ்லாமியின் தனிநபர் அறிக்கைகள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் தவ்ஹீத் ஜமாத்தை குறை சொல்லி தனிநபர் அறிக்கை விடுபவர்களில் யாருமே கிராண்ட்பாஸ் பக்கம் போகவே இல்லை என்பதுதான்.

தற்பொழுது எரியும் தவ்ஹீத் - தப்லீக் வேற்றுமை நெருப்பில் குளிர் காய்ந்துகொண்டே உச்சிக் கோப்பில் ஏற்றப் பட்ட ரிஸ்வி முப்திக்கு ஒரு வழி பண்ண கோடாரியை தீட்டிக் கொண்டு தயாராக இருக்கின்றார்கள் ஜமாத்தே இஸ்லாமிகள்.
- See more at: http://www.importmirror.com/2013/08/blog-post_13.html#sthash.tcZG5rWN.dpuf

1 கருத்துகள்:

SLM சொன்னது…

அல்ஹம்துலில்லாஹ். ஜமாஅத். இ . இஸ்லாமி சொல்லி எல்லா ஜமாத்தும் கேட்கும் நிலையில் தான் இன்று இலங்கையில் எல்லா ஜமாத்தும் உள்ளதா .நீங்கள் சொல்வதில் உண்மை இருந்தால் அல்லாஹ்வின் தீர்ப்பு நாளில் யாரும் தப்பமுடியாது . அது வீண் பலி சுமதுபவர்களாக இருப்போரும்தான் தப்பமுடியாது. இயக்க வேறுபாட்டை நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் வரைக்கும் இந்த நாட்டிலும் ,உலகிலும் பெரும்பான்மைனர் எம்மை இல்லது ஒழிக்க ரூம் போட்டு யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts