
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் உடைப்புக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம்தான் பொறுப்புக் கூற வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை அரசாங்கத்தின் ஒட்டுக்குழுக்களாக செயற்படும் பேரினவாத பௌத்த பிக்குமாரை கொண்ட வன்முறை கும்பலே கிராண்ட்பாஸ் முஸ்லிம் பள்ளிவாசல் மீதான தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் கண்டியில் இருந்த நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தொலைபேசியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அப்போது பதிலளித்துள்ள ஜனாதிபதி, இதற்கு நீங்கள் தான் பொறுப்பு கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.
தான் ஏன் பொறுப்பு கூறவேண்டும் என்று அமைச்சர் வினவிய போது, நீங்கள் பள்ளிகளை உடைப்பதாக கிழக்கு மாகாணத்திற்கு சென்று பொய்களை கூறியதால், கோபமடைந்த இளைஞர்கள் பள்ளியை தாக்கியிருக்கலாம்.
ஆகவே குழப்பமடைய வேண்டாம் இது ஒரு சிறிய சம்பவம் என்று ஜனாதிபதி, அமைச்சர் ஹக்கீமுக்கு பதிலளித்துள்ளர் என்றும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: