
நேற்று இரவு முழுவதும் உயிரைப் பணயம் வைத்துப் போராடி இரவோடு இரவாக காவிக் காடையர்கள் வெளியேறும் வரை வெளியேறமாட்டோம் என்று அடம்பிடித்து காவிக் காடையர்களை வெளியேற்றிய பின் இரவு 03 மணிக்கு ஜமாத் நிர்வாகிகள் பள்ளிவாயல் இடத்தைவிட்டும் வெளியேறினார்கள்.
இன்று காலையிலேயே பள்ளி அமைந்துள்ள இடத்திற்கு சென்ற ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்தினர் சில நிமிடங்களுக்கு முன்பு வரைக்கும் அங்கேயே காத்திருந்தார்கள்.
- இறுதியில் பள்ளியை இழந்தோம் -
சில நிமிடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட முடிவின்படி அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட மோலவத்த பள்ளியை ஜம்மிய்யதுல் உலமாவும், பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளிவாயல்கள் சம்மேலனம் (கொழும்பு) ஆகியவைகள் இணைந்து விட்டுக் கொடுத்துவிட்டன.
- SLTJ யின் கோரிக்கை மறுப்பு – சிங்கள ராவயவின் கோரிக்கை ஏற்பு -
பள்ளிவாயலை விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும், பள்ளிவாயல் அதே இடத்தில் தான் இயங்க வேண்டும் என்றும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் பல கட்ட கோரிக்கைகளை முன் வைத்தது. இருப்பினும் இறுதியாக பள்ளியை அகற்ற வேண்டும் என்றும் பழைய பள்ளியை தான் இயக்க வேண்டும் என்றும் சிங்கள ராவய மற்றும் காவிக் காடையவர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று பள்ளி நிர்வாகம் மற்றும் உலமா சபை ஆகியவை பள்ளியை விட்டுக் கொடுத்துவிட்டார்கள்.
- எங்கள் (தப்லீக்) பள்ளிக்கு நீங்கள் (தவ்ஹீத் ஜமாத்) போராட வேண்டாம் -
தப்லீக் ஜமாத்திற்கு சொந்தமான பள்ளியை எங்கள் உலமாக்கள் பார்த்துக் கொள்வார்கள் தவ்ஹீத் ஜமாத்தினராகிய நீங்கள் போராட வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்று உயிரைப் பணயம் வைத்துப் போராடிய ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினரை அவமானப் படுத்தி வெளியேற்றினார்கள்.
- போராட்டம் வாபஸ் -
மோலவத்தை பள்ளிக்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் பல கட்டங்களிலும் நடத்திய போராட்டங்களில் இருந்து நீங்கிக் கொள்கின்றது. பள்ளி நிர்வாகத்தை நம்பி அவர்கள் உறுதியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் களமிறங்கினோம்.
ஆனால் மீண்டும் மீண்டும் எமது கோரிக்கைகளை மறுத்து உலமா சபை மற்றும் பள்ளி நிர்வாகிகள் பள்ளியை விட்டுக் கொடுத்துவிட்டார்கள். இது இலங்கையில் பாதிக்கப்பட்ட 24 வது பள்ளிவாயலாகும்.
இது போன்றவர்களை நம்பி உயிரைப் பணயம் வைத்துப் போராடுவதில் எவ்வித பயனும் இல்லை என்பதை இறைவன் எமக்கு உணர்த்தியிருக்கின்றான்.
அல்லாஹ்வின் மாளிகைக்காக எம்மால் முடிந்தவரைக்கும் போராட்டம் நடத்தினோம். எமது இறையச்சத்திற்குறிய கூலியை வல்ல ரஹ்மானிடம் மாத்திரமே எதிர்பார்கின்றோம்.
இந்த நிமிடத்திலிருந்து மோலவத்தை பள்ளிக்கான ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் போராட்டத்தை வாபஸ் பெருகின்றோம்.
-www.sltj.lk-
0 கருத்துகள்: