நேற்று
தம்புள்ள கண்டலம சந்தியில் அமைந்துள்ள காளி கோயிலின் பிரதான சிலையை, பௌத்த
பிக்குகள் எடுத்துச் செல்ல முயற்சித்துள்ள போது அங்கு பதட்ட நிலை
தோன்றியுள்ளது. தம்புள்ள
உயன்வத்த ரஜமஹா விஹாரையில் காணப்படும் விஸ்ணு தேவாலயத்தில் பிரதிஷ்டை செய்ய
முயற்சித்துள்ளனர். இதன் போது ஆலய பூசகரும் இந்து பக்தர்களும் இதற்கு
எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனால் குறித்த பிரதேசத்தில் பதற்ற
நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பௌத்த பிக்குகள் ஊர்வலமாகச்
சென்று குறித்த சிலையை எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளனர்.
ஒரு மணித்தியாலம் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கோயிலை வேறும் இடத்தில் அமைப்பதற்கு 5ம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: