அநுராதபுரம் முஹிதீன் பெரிய பள்ளி வாசலின் கீழ் இயங்கும் மல்வத்து ஓயா தக்கியா பள்ளிவாசல் இன்று மாலை 4.00 மணியளவில் நகரசபையினால் முழுமையாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாய் இயங்கி வரும் இப்பள்ளி வாசலை அண்டி சுமார் 40 முஸ்லிம் குடும்பங்கள் வாழுகின்றனர். பன்சலைக்கு பக்கத்தில் இப்பள்ளி வாசல் அமைந்துள்ளதால் இதனை அகற்றுமாறு கோரி பலவிடுத்தம் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்ததன் எதிர் வினையாகவே இப்பள்ளி வாசல் தகர்ப்பு இடம்பெற்றுள்ளது.

பெரிய பள்ளி வாசல் நிர்வாகத்திற்குத் தெரியாமல் பள்ளி தலைவரின் தனிப்பட்ட அனுமதி கடிதத்தைப் பெற்றே இறை ஆலய இடிப்பு நடந்துள்ளதாக பெரிய பள்ளிவாசலின் காரியதரிசி பாரூக் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு தெரிவித்தார்.

தம்புள்ளை பள்ளியில் ஆரம்பித்து மல்வத்து ஓயா பள்ளி வரை 25 பள்ளிவாசல்கள் இனவாதிகளினால் தாக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களின் கையாலாகாத் தன்மையையே வெளிக்காட்டுகின்றது. அத்தோடு, முஸ்லிம் சமுதாயத்தின் வழிகாட்டிகள் என்று தம்மை தம்பட்டமடிக்கும் ஜம்இய்யதுல் உலமாவும் இஸ்லாமிய இயக்கங்களும் வாய்பொத்தி நிற்பதோடு மட்டுமன்றி, இனவாதிகளினதும், அரச அதிகாரிகளினதும் அழுத்தங்களுக்கு அஞ்சியும் முஸ்லிம்களின் ஒவ்வொரு உரிமையாக தாரை வார்த்து வருவதன் விளைவே தொடர்ந்தேர்ச்சியாக அரங்கேற்றப்படும் இறை இல்ல இடிப்பாகும்.

கிரேண்ட பாஸ் பள்ளி வாசலை விட்டுக்கொடுத்து அதன் பரபரப்பு தணிவதற்குள் முஸ்லிம்களின் 25ஆவது மஸ்ஜிதும் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளமையும், வழமை போன்று முஸ்லிம் பெயர் தாங்கித் தலைமைகளே இதற்கு துணை போய் உள்ளமையும் எமது உம்மத்தின் அவலத்தையே சுட்டிக்காட்டுகிறது.

இடிக்கப்பட்ட மல்வத்து ஓயா தக்கியாவிடயத்தில் ஜம்இய்யதுல் உலமா ஹூதைபிய விட்டுக்கொடுப்பை காரணம் காட்டினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. கிரேண்ட் பாஸில் அரச மரம் தரிக்கப்பட்டதன் மூலம் இனவாதிகள் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு விடுத்த செய்தி இது தான் “நாம் எமது பக்தி உணர்வுமிக்க அரச மரத்தையே நல்லிணக்கத்திற்காக விட்டுத்தந்து வெட்டித் தரித்திருக்கிறோம். இது போன்று முஸ்லிம்களும் தங்கள் பள்ளிகளையும் இருப்புகளையும் விட்டுத்தர வேண்டும்.” என்பது தான்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts