மக்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பவே கிறேன்ட்பாஸ் பள்ளிவாசல் உடைப்புச் சம்பவம் நடந்திருக்க வேண்டும். வெலிவேரிய சம்பவத்தில் அதிரடிப் படையினரை களத்துக்கு அனுப்பியது நானே என்று சும்மா வாயைக் கொடுத்து ஞான சார தேரர் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகி சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார்.

அதேபோல் அச் சம்பவத்தில் பொதுமக்களைத் தாறுமாறாகச் சுட்டதாலும், அதில் பலர் கொல்லப்பட்டதாலும் அரசாங்கமும், பாதுகாப்புத் தரப்பும் உள்நாட்டு வெளிநாட்டு கண்டனங்களை சமாளிக்க முடியாது தவித்துக் கொண்டிருந்தன. பல நாற்கள் கடந்தும் மீடியாக்களும் மக்களும் துரத்திக் கொண்டிருந்த வெலிவேரிய சம்பவத்துக்கு பதில் சொல்லிக் கொள்ள முடியாமல் மேற்குறிப்பிட்ட தரப்பினர் அனைவரும் செய்வதறியாது திக்குமுக்காடிக் கொண்டிருந்த வேளையிலேயே புகைந்து கொண்டிருந்த கிறேன்ட்பாஸ் பள்ளி விவகாரத்தை மிகக் கவனமாகத் திட்டமிட்டு பற்றவைத்து விட்டார்கள்.

இப்போது அவர்கள் எதிர் பார்த்தது போலவே சகல மீடியாக்கள், அரசியல் வாதிகள், உள்நாட்டு வெளிநாட்டு அவதானிகள், பொது மக்கள் என அனைவரின் கவனமும் வெலிவெரியவில் இருந்து கிறேண்ட்பாசின் பக்கம் குவிய ஆரம்பித்துள்ளது. ஒரு அநீதியின் போது ஏற்பட்ட நெருக்கடியை திசை திருப்ப சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது வேறொரு வகையான மெகா அநியாயத்தைப் பண்ணி விட்டார்கள். இது போன்ற நெருக்கடிகளின் போது மக்களை மடையர்களாக்குவதற்கு உலகின் கிட்டத் தட்ட எல்லா அரசாங்கங்களுமே அவைகளின் குடி மக்கள் வாயில் வேறு ஒருவகையான அவலைத் திணித்து விடுவதுண்டு.ஆனாலும் துரதிஷ்ட வசமாக இலங்கை மக்களின் வாயில் திணிக்கப் பட்ட அவலோ ஒரு சிறு பான்மை இனத்தின் மத உரிமையை சப்பி விழுங்கி ஏப்பம் விடுவதாக அமைந்து விட்டது.
அரசாங்கத்தின் மீது அதிக அழுத்தம் ஏற்படும் எல்லா சந்தர்பங்களின் போதும் சமூகத்தின் கவனத்தை வேறு பக்கம் திருப்ப சிறுபான்மை முஸ்லிம்களின் இருப்பும், உயிர்களும், பொருற்களும், உடமைகளும் தான் குறி வைக்கப் படுமோ எனும் பலத்த சந்தேகம் உருவாக ஆரம்பித்துள்ளது. இது ஒரு புறம். இன்னுமொரு புறம் பிரச்சினைகளை சமாளிக்க முடியாது தவித்துக் கொண்டிருக்கும் எமது முஸ்லிம் சமூகம் பிறை, மற்றும் கிறேன்ட்பாஸ் பள்ளி விவகாரங்களை வைத்து ஊடகங்களைப் பயன் படுத்தி உள்வீட்டு யுத்தம் நடாத்திக் கொண்டிருப்பது எல்லை மீறிச் சென்று கொண்டிருப்பதைப் பார்க்கும் போது நாமும், எமது சமூகமும் மடையர்களாகி விட்டோமா, அல்லது புத்தியைப் பறிகொடுத்து விட்டோமா என்று எண்ணத் தோன்றுகிறது.
எமக்குள் ஒரு சாரார் இன்னொரு சாரார் மீதும் ஒரு இயக்கம் இன்னொரு இயக்கத்தின் மீதும் வசை பாடுவதையும், பழி சுமத்துவதையும் உடன் நிறுத்தி விட்டு கொள்கைகளுக்கு அப்பால் இன்று எம் அனைவருக்கும் பொதுப் பிரச்சனையாக ஏற்பட்டிருக்கின்ற பெரும்பான்மை இன வாதிகளின் சூழ்சிகளை முறியடிப்பதில் அல்லாஹ்வுக்காக ஒன்று சேருவோம். கொள்கையை எமக்குள்ளே பேசினால் தானே பிரச்சினை.கொள்கைகளுக்கு அப்பால் இனவாதிகள் மூலம் ஏற்பட்டுள்ள பொதுப் பிரச்சினையை எதிர் கொள்வதில் நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பொதுப் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் விடயத்தில் எமக்கிடையே கருத்து வேற்றுமைகள் வருமானால் ( கிறேன்ட்பாஸ் பள்ளி விடயத்தில் ஏற்பட்டது போல) ஒன்றுக்கு பல முறையாவது உற்கார்ந்து அவற்றை எமக்குள்ளே பேசி எல்லோரும் ஒரே இணைக்கப் பாட்டின் கீழ் வந்தாக வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாகப் பட்டு விட்டோம்.

அவ்வாறின்றி இது போன்ற பொதுப் பிரச்சினைகளிலாவது ஒன்று சேராது இவ்வளவு இக்கட்டான தருவாயிலும் எமக்குள்ளே ஊடகப் போர் நடாத்திக் கொண்டும், மேடை போட்டு ஒரு சாரார் இன்னொரு சாராரை வசை பாடிக் கொண்டும் இருப்போமானால் அல்லாஹ்வின் உதவியை முற்றாக இழப்போம். மிகவும் பிழையான முன்மாதிரிகளைக் கொண்ட சமூகமாக எக்காலமும் நோக்கப் படுவோம். சும்மா தன் பாட்டுக்கு எம்மில் பலரும் மிகவும் தரக் குறைவான வார்த்தைகளால் ஏசிக் கொண்டும், திட்டிக் கொண்டும் ஊடகங்களில் விளையாட்டு நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரக் கணக்கான தமிழ் சகோதரர்கள் நேரடியாகவும், ஆயிரக் கணக்கான சிங்கள சகோதரர்கள் மொழி மாற்றத்தின் வழியாகவும் மேலே சுட்டிக் காட்டிய எம் சமூகத்தின் வண்டவாளங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் ஒரு கணமேனும் சிந்திப்போம்.

எம்மில் ஒரு கூட்டம் வானமே இடிந்தாலும் நமக்கென்ன. நானும் எனது குடும்பமும் நன்றாகவே இருக்கிறோம் என்ற நினைப்போடு நாற் கடத்துகின்றனர்.இன்னுமொரு கூட்டாமோ போட்டுக் கொடுத்துக் கொண்டும் குழி வெட்டிக் கொண்டுமிருக்கிறார்கள். இன்னும் சில கூட்டத்தார் சில முயற்சிகளைச் செய்த போதிலும் நாமே சரியாகச் செய்தோம், எமது குறியே சரியாகப் பதம் பார்த்தது என தமக்குள்ளே அடித்துக் கொண்டு சமூகத்தை இன்னுமின்னும் இக்காட்டில் தள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான்காவது கூட்டமோ எம் சமூகத்தின் மோட்டுத் தனங்களைப் பார்த்துப் பார்த்து தலை குழம்பிப் போய் செய்வதறியாது கைகளை பிசைந்து கொண்டிருக்கிறது. உருப்படியாக எதையாவது பண்ணி சமூகத்தை கரை சேர்ப்பதற்கு முயற்சிப்போருக்கு எமது சமூகக் களத்திலே இடமும் இல்லை. விடவும் மாட்டார்கள் போல் உள்ளது.

யா அல்லாஹ் எமது இலங்கை முஸ்லிம்களுக்கு ரஹ்மத் செய்வாயாக. இக்கட்டான இத் தருவாயில் தத் தம் குரோதங்களைத் தூக்கி எரிந்து விட்டு இக்லாசுடன் களத்தில் இறங்கி பாடு பட்டு எம் சமூகத்தை கரை சேர்ப்பதில் நாட்டின் அனைத்து முஸ்லிம்களையும் ஒன்று சேர்ப்பாயாக.

-Ash Sheikh M Z M Shafeek-

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts