மியன்மார் நாட்டில் முஸ்லிம் மற்றும் பௌத்தர்கள் இடையே கடந்த
புதன்கிழமை ஏற்பட்ட மோதலில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர்
காயமடைந்துள்ளனர்.
அந்நாட்டின் மீகிடிலா நகரிலேயே இம்மோதல் இடம்பெற்றுள்ளது.
முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான நகைக்கடையொன்றில் வைத்து பௌத்தர்கள் சிலருடன் மோதல் ஆரம்பித்துள்ளது.
இதையடுத்து சுமார் 200 இற்கும் மேற்பட்டோர் வீதிகளில் மோதிக்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெளத்த பிக்கு உட்பட 3 பௌத்தர்களும், 2 முஸ்லிம்களும் இம் மோதலில் உயிரிழந்துள்ளனர்.
முஸ்லிம்களின் மூன்றுபள்ளிவாசல் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான வாகனங்கள், கடைகள் ஆகிய எரிக்கப்பட்டுள்ளன.
மோதல்களை அடுத்து அங்கு தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்துகள்: