
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர்
ஹசன் மௌலானா ஆஸாத் சாலிக்கு எதிராக 5 முறைப்பாடுகளை கொழும்பு
குற்றத்தடுப்பு பிரிவில் பதிவு செய்துள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு
அறியவருகிறது.
பொது மேடைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக கருத்து வெளியிட்டமை
மற்றும் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட 5 முறைப்பாடுகள்
ஆஸாத் சாலி மீது ஹசன் மௌலானாவினால் சுமத்தப்பட்டுள்ளது.
ஆசாத் சாலியை இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில்
ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும் அவர் ஆஜராகவில்லை. அவருக்கு
பதிலாக அவரது சட்டத்தரணிகள் ஆஜரானதாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு
மேலும் அறியவருகிறது.
(நன்றி. jaffnamuslim.com
0 கருத்துகள்: