ஹலால்
தேவையென்றால் அல்லாஹ்வின் நாட்டுக்குச் செல்லவும் என ஜாதிக ஹெல உறுமய
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் தலைக்கு தொப்பி வைத்தாலோ, பெண்கள் பர்தா அணிந்தாலோ அதில்
தவறில்லை, எனினும், எங்களுக்கும் தொப்பியும் பர்தாவும் அணிவிக்க
முயற்சித்தால் அதனை ஏற்க முடியாது.
ஹலாலிற்கு பௌத்தர்களோ, பௌத்த பிக்குகளோ எதிர்ப்பை வெளியிடவில்லை. எதிர்ப்பை வெளியிட வேண்டிய அவசியமும் கிடையாது.
ஹலால் பேரில் இடம்பெறும் துர்நடத்தைகளையே நாம் எதிர்க்கின்றோம்.
முஸ்லிம் கலாச்சாரத்தை, இஸ்லாமிய மத கோட்பாடுகளை ஏனைய இன சமூகத்தின் மீது திணிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதன் போது வழங்கப்பட்ட உதவிகளை ஹலால் ஹராம் என முஸ்லிம்கள் வகையீடு செய்து
பெற்றுக்கொள்ளவில்லை. முஸ்லிம்களுக்கு இரத்தம் தேவைப்படும் போது
சிங்களவர்களின் இரத்தம் கைகொடுத்தது. அப்போது அவர்கள் ஹலால் ஹராம்
பார்க்கவில்லை.அத்துடன் நிர்ப்பந்தமான சூழ்நிலையில் உணவுகள்
கிடைக்காதபட்சத்தில் ஹராம் உணவுகளையும் சாப்பிட முஸ்லிம்களுக்கு அனுமதி
உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்: