
சிவில் உடையில் வந்த பெஹலியகொட பொலிசாரினாலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன் பொழுது இறைச்சி அறுக்கும் இடத்தில் வேலை செய்த ஒருவர் எமக்கு கருத்துத் தெரிவிக்கையில் :
நாம் வழமைபோல் இன்று காலை எமது வேளைகளில் ஈடுபற்றிருந்தோம், திடீர் என எமது மடுவத்தை நோக்கி ஜீப் ஒன்று வந்தது. அதில் சுமார் 6 பேர் அளவில் இருந்தனர். அனைவரும் சாதாரண உடையிலே இருந்தனர். ஜீப்பில் இருந்து இறங்கியவர்கள் நாம் பெஹலியகொட பொலிசார் என்பதை உறுதிசெய்தனர், பின் எமது வேலைகளை நிறுத்துமாறு உத்தரவிட்டனர். அதற்கான காரணமாக அவர்கள் முன்வைத்து இந்த இறைச்சி மடுவம் அனுமதியில்லாமல் இயங்குவ என்பதாகும். உண்மையில் இந்த இறைச்சி மடுவம் அனுமதியுடன் இயங்கி வருகிறது. அதற்கான ஆதாரங்களை நாம் ஒப்படைத்தபின் அவர்கள் திருப்பிச் சென்றுவிட்டனர்.
இதேபோல் கடந்த ஒரு மாதங்களிற்கு முன்பதாக ஹிஜ்ரா மாவத்தையில் இயங்கிவந்த இறைச்சி விற்பனை நிலையத்தை பொலிசாரால் முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது.


நன்றி www.thihariyanews.com
0 கருத்துகள்: