நேற்று கண்டியில் நடைபெற்ற பொதுபல சேனாவின் கூட்டத்தில்
ஜம்இய்யதுல் உலமா சபை ஹலால் சான்றிதழை வழங்குவதை முற்றாக தடைசெய்ய
வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பொதுபல சேனா இன்று 4
கோரிக்கைகள் அடங்கிய பிரேரணையொன்றை முன்வைத்தது.
01. ஜம்மியத்துல் உலமா ஹலால் சான்றிதழ் வழங்குதல், அதற்காக பணம்
அறவிடுதல் மற்றும் அதனை மேற்பார்வையிடுதல் என்பவற்றை பகிரங்க அறிவித்தல்
மூலமாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
02. ஹலால் சான்றிதழைப் பெற்ற அனைத்து வியாபாரிகளும் தாங்கள்
சட்டத்துக்கு முரணான செயற்பாட்டை செய்வதாக உணர்ந்து குறைந்தபட்சம் வியாபார
சம்மேளனங்கள் ஊடாக ஹலால் சான்றிதழை நீக்கவிட்டதாக அறிவிக்கவேண்டும்.
03. சந்தையிலுள்ள ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட பொருட்களிலிருந்து ஹலால் இலச்சினையை முற்றாக நீக்கவேண்டும்.
04. எதிர்காலத்தில் எந்தவொரு பொருளிலும் இஸ்லாமிய இலச்சினையை
பயன்படுத்தாது மற்றவர்களைப் புண்படுத்தாத முறைமையைப் பயன்படுத்தவேண்டும்.
மேற்குறித்த நடைமுறைகளுக்கமைய ஹலால் முறைமையை முற்றாக நீக்குவதற்கு
ஜம்மியத்துல் உலமா மற்றும் அதுசார்ந்த அமைப்புகள் அமுல்படுத்தவேண்டும்.
ஹலால் சான்றிதழ் இலங்கையலிருந்து முற்றாக ஒழிக்கப்படும்வரை நாங்கள் அவதானமாக இருப்போம் என்றும் மேலும் தெரவித்துள்ளது.



0 கருத்துகள்: