டீசலுக்கு
பதிலாக பெட்ரோலை ஊற்றியதால் கார் ஓடாமல் மக்கர் பண்ணியது ஒபாமாவின்
இஸ்ரேல் யாத்திரையில் எரிச்சலை ஏற்படுத்தியது. இஸ்ரேல் அதிபர் ஷிமோன்
ஃபெரசுக்கு பரிசாக அவரது வீட்டில் ஒபாமா நட்ட செடியை இஸ்ரேலிய ராணுவம்
பிடுங்கி சோதித்ததும் சர்ச்சையை கிளப்பியது.
’தி பீஸ்ட்’ என்று அழைக்கப்படும் ஜெனரல் மோட்டார்ஸ் ஒபாமாவுக்காக
பிரத்யேகமாக தயாரித்த ஏழரை கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனத்தில் டீசலுக்கு
பதிலாக பெட்ரோலை டிரைவர் ஊற்றியதால் ஓடாமல் நின்றுவிட்டது. இதனால் டெல்
அவீவ் விமான நிலையத்தில் இருந்து ஜெருசலத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக ஒபாமா
சென்றார். பின்னர் அமெரிக்காவில் இருந்து கப்பல் மூலமாக வேறொரு கார்
கொண்டுவரப்பட்டது.
பத்திரிகையாளர்கள், அலுவலக பணியாளர்கள்,
தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட நபர்கள் அடங்கிய
குழுவினர் வெளிநாட்டுப் பயணத்தில் ஒபாமாவுடன் செல்வது வழக்கம். இஸ்ரேலிலும்
இதே எண்ணிக்கையிலான நபர்கள் உடனிருந்தனர்.
இஸ்ரேல் அதிபர் ஷிமோன்
ஃபெரஸின் வீட்டுக்குச் சென்ற ஒபாமா அவருடன் இணைந்து அமெரிக்காவில் இருந்து
கொண்டு வந்த மங்கோலிய நாட்டுச் செடியை நட்டார். பின்னர் ஒபாமா கிளம்பிய
பிறகு அச்செடியை பிடுங்கி இஸ்ரேல் ராணுவம் பரிசோதித்தது. இஸ்ரேல் சட்டப்படி
வெளிநாடுகளிலுள்ள செடிகளை பரிசோதிக்க வேண்டும். அதனடிப்படையில்
பரிசோதித்ததாக இஸ்ரேல் ராணுவம் விளக்கமளித்தது.
0 கருத்துகள்: