ஹலால் சான்றிதழ் பிரச்சினைக்குப் பின் SMS மற்றும் சமூக தளங்களில்
அதிகமாக உலாவந்த விடயம் குறிப்பிட்ட உணவுப் பொருளின் தயாரிப்பு நிறுவனம்
ஹலாலை நிராகரித்தது நாங்களும் இப்பொருட்களை நிராகரிப்போம்.அல்லது குறிப்பிட்ட உணவுப் பொருளின் தயாரிப்பு நிறுவனம் ஹலால் சான்றிதழை புதுப்பித்தது நாங்களும் இவற்றை நுகர்வோம் என்ற தொனியில் பகிரப்பட்ட பிரசுரங்களே.. ஆனால் அவற்றுக்கு சரியான ஆதாரம் இல்லாததால் முஸ்லிம்கள் குழப்பமடைய வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானர்.
இக்குறை இப்போது தீர்க்கப்பட்டுள்ளது.
ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள், வாபஸ்பெறப்பட்ட நிறுவனங்கள், இவைபோன்ற ஹலால் தொடர்பான ஏனைய தகவல்களைத் தெரிந்து கொள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது.
அவை வறுமாறு: - 0117 425 225
0817 451 355

0 கருத்துகள்: