தமது சமயத்திற்கு அப்பாவி பௌத்த மக்களை உள்வாங்கி இலங்கையை ஒரு கிறிஸ்தவ நாடாக மாற்ற முயற்சிக்கின்றனர்' என 'பொது பல சேனா' இயக்கத்தின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.

இலங்கையில் 400க்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை கிறிஸ்தவ தர்மத்தை பறப்பும் நோக்கில் செயற்படுகின்றன. அவற்றில் அனேகமானவை, பாலர் பாடசாலை, ஆங்கில வகுப்பு, புன்னிய கர்மங்கள் மற்றும் பலதரப்பட்ட உதவிகள் மேற்கொண்டு வருகின்றன" என்றும் அவர் குறிப்பிட்டார்.

கண்டி நகரில் மத்திய சந்தை முன் இடம்பெற்ற பொது பல சேனாவின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'நாங்கள் 400 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டு சக்திகளாள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தோம். அக்காலத்தில் நாங்கள் எதிர்நோக்கிய சவால்கள் என்னிலடங்காதது. சிங்கள பௌத்த மக்கள் அன்று முதல் உயிர் தியாகம் செய்தே இன் நாட்டை பாதுகாத்தனர்.

தற்போது மீண்டும் எம் நாட்டுக்கு பல்வேறு வடிவில் சவால்களும் ஆக்கிரமிப்புக்களும் வந்த வண்ணம் உள்ளன.

அதேநேரம் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பௌத்த இளைஞர் யுவதிகளை பலவழிகளில் மத மாற்றம் செய்து இன்னும் 50 வருடங்களில் இலங்கையை இஸ்லாமீய நாடாக மாற்ற விசேட திட்டம் தீட்டுகின்றனர்.

எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி முஸ்லிம்களது வர்த்தக நிலையங்களில் சிங்கள யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி அவர்களை பல வழிகளில் மதமாற்றம் செய்கின்றனர்.

தயவு செய்து இதனை நிறுத்துமாறு அவர்களிடம் நான் கேட்கின்றேன். இல்லாதவிடுத்து சிங்கள யுவதிகளை முஸ்லிம்களது வர்த்தக நிலையங்களில் வேலைக்கு அனுப்புவதை சிங்களவர்கள் நிறுத்த வேண்டிவரும்.

நாங்கள் இந்த அபாயகரமான நிலையை உணர்ந்து கடந்த மே மாதம் முதல் நடாத்திய போராட்டதின் பாரிய வெற்றிதான் ஹலால் வெற்றியாகும்.

எங்களில் சிலர் எமக்கு குற்றம் கூறுகின்றனர். நாங்கள் இன யுத்தம் ஒன்றையும் மத யுத்தம் ஒன்றையும் திணிக்க முற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். இருந்த போதும் 30 வருடங்களாக நாங்கள் அனுபவித்த யுத்தம் காரணமாக நாட்டின் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டனர்.

எனவே இன்னுமொரு இன மத மோதலை ஏற்படுத்த நாங்கள் இடமளிக்க மாட்டோம்' என்று அவர் மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts