அராங்கத்தின் கேவலமான செயற்பாடுகளுக்கு நான் ஒருபோதும்
அஞ்சவும் மாட்டேன் அடிபணியவும் மாட்டேன் என்று கர்ஜிக்கிறார் தேசிய
ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர முன்னாள் பிரதி
முதல்வருமான அசாத் சாலி.
இன்று மாலை அவரது வீடு சோதனையிடப்பட்டமை தொடர்பாக மெட்ரோ மிரர் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது மெட்ரோ மிரர் தொடுத்த கேள்விகளுக்கு அசாத் சாலி அளித்த பதில்களின் சுருக்கமான தொகுப்பை இங்கு தருகிறோம்.
கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று மாலை எனது அலுவலகத்தை சுற்றிவளைத்ததுடன் வீட்டையும் சோதனையிட்டனர். அதேவேளை என்னைக் கைது செய்யவும் அவர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இரண்டு ஜீப் வண்டிகளில் வருகை தந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர்; தனக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பிலேயே கைது செய்யப் போவதாகவும் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் வாக்குமூலம் ஒன்றை அளிக்கும் பொருட்டு நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு கொலன்னாவையில் உள்ள விசேட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு வருமாறு என்னைப் பணித்துள்ளனர்.
ஜெனீவா பிரேரணைக்குப் பின்னர் அரசாங்கம் தனக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் என்பதை நான் உணர்ந்திருந்தேன். என்றாலும் நான் அச்சப்படவில்லை.
நான் எத்தகைய சவால்களுக்கும் முகம் கொடுக்க தயாராகவே உள்ளேன். முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக நான் தொடர்ந்தும் போராடுவேன். இனவாதிகளின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நான் தொடர்ந்தும் குரல் எழுப்புவேன்.
இதன்போது அரசாங்க தரப்பில் இருந்து எத்தகைய அழுத்தங்கள், பிரச்சினைகள் வந்தாலும் அவற்றுக்கு முகம் கொடுக்க தயாராகவுள்ளேன்.
அவர்களின் கேவலமான செயற்பாடுகளுக்கு நான் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை. அடிபணியப் போவதுமில்லை.
மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று. முஸ்லிம் ஒருவன் அதனை எந்த கணப்பொழுதிலும் சந்திக்க தயாராக இருப்பவன். அதில் நம்பிக்கை கொண்டுள்ள நான் எந்த சக்தியின் அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சி- அடிபணிந்து- ஓடி- ஒழிய மாட்டேன்.
எனது உயிர் மூச்சு இருக்கும் வரை முஸ்லிமகளின் பாதுகாப்புக்காகவும் நாட்டின் ஜனநாயகத்திற்காகவும் இனங்களின் ஐக்கியத்திற்காகவும் தொடர்ந்தும் பாடுபடுவேன்.
இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் பொறுமையைக் கடைப்பிடித்து பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஹர்த்தால், கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகள் நமக்கு பாதகமாக அமையாத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையேல் அவற்றைக் கைவிட வேண்டும்.
ஏனெனில் நாட்டில் எந்த மூலை முடுக்கிலாவது சிறு அசம்பாவிதம் ஒன்று நிகழ்ந்து விட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய தருணம் ஒன்றை பேரினவாதிகளும் அரச தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர். ஆகையினால் அத்தகைய துரதிருஸ்ட சந்தர்ப்பம் ஒன்று ஏற்படாதவாறு மிகவும் விவேகத்துடன் நாம் நடந்து கொள்வது அவசியமாகும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.

0 கருத்துகள்: