பொது பலசேனா என்ற அடிப்படைவாத அமைப்பு இன்னும் இரண்டு போயா தினங்களுக்குள் மரணித்துவிடப்போகிறது. எனவே, எந்தவொரு முஸ்லிமும் கலக்கமடையவோ, கவலைப்படவோ தேவையில்லை. ஏனெனில் அது அரைகுறை பெளத்தர்களைக் கொண்ட அமைப்பாகும். பெளத்த தர்மமானது பிரிவினை வாதத்தையோ, மதவாதத்தையோ போதிக்கவில்லை என்று தேசப்பற்றுள்ள தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் தம்பர அமில தேரர் தெரிவித்தார்.


தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலியின் ஏற்பாட்டில் ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற வேற்றுமையில் ஒற்றுமை காணு வோம் எனும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகை யிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


தம்பர அமில தேரர் இங்கு மேலும் கூறுகையில்,
நாம் அனைவரும் இலங்கையர் என்பதை முதலில் உணர வேண்டும். பள்ளிவாசல்கள் அதிகரித்துச் செல்வதாகவும் அதனால் பெளத்தத்துக்கு ஆபத்து என்றும் சிங்கள பெளத்தர்களை ஏமாற்றி அச்சுறுத்தும் செயற்பாடுகளில் சிலர் இறங்கியுள்ளனர்.



உண்மையான பெளத்தர்களிடம் பிரிவினைவாதமோ, மதவாதமோ கிடையாது. நான் உண்மையான பெளத்தன் என்பதனை இங்கு கூறிக்கொள்கிறேன். அரைகுறை பெளத்தர்களாலேயே இந்த பிரிவினை வாதங்கள் தூண்டிவிடப்படுகின்றன.


சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வரலாற்று ரீதியிலான உறவு
பேணப்பட்டு வருகின்றது. இந்த உறவினை சிதறடிப்பதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை.


ஹலால் ஹராம் என்பவற்றை பிரித்துப்பார்க்கும் போது தமிழர்களையும் முஸ்லிம்களையும் தாக்குவதும் அரச காணிகள் வெளியாருக்கு விற்கப்படுவதும் ஜனநாயகம் மறுக்கப்படுவதுமே ஹராமாகவும் இவற்றுக்கு மாறானவை ஹலாலாகவும் பார்க்கப்பட வேண்டும்.


30 வருடகால யுத்தத்தினால் வலிமாத்திரமே எஞ்சியிருக்கின்றது. எனவே, அது குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. 2005ஆ ம் ஆண்டு காலப்பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஒரு பகுதியினர் கிளர்ந்தனர். அவர்கள் வேறுயாருமல்ல. ஜாதிக ஹெல உறுமய என்ற அமைப்பினரே அன்று இந்நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு எதிராகவும் செயற்பட்டு சிங்களவர்களின் வாக்குகளைப் பெற் றுக்கொண்டது.


அன்று நாம் அந்த செயற்பாட்டுக்கு எதிராக நின்றோம். அதே போன்றுதான் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்து நிற்கின்ற பொது பல சேனாவுக்கு எதிராக குரல் கொடுக்கின்றோம்.


இன்னும் இரண்டு வாரம் அல்லது இரண்டு போயா தினங்களுக்குள் பொது பல சேனா என்ற அமைப்பு நிச்சயமாக அஸ்தமத்து மரணித்து விடத்தான் போகிறது. அதில் சந்தேகமே இல்லை.


இந்நாட்டில் பெளத்தத்துக்கு எதிராக பல்வேறு சக்திகள் முளைத்தன. ஆனால், எதுவும் செய்துவிடவில்லை. அதே போன்று தான் எதிர்காலத்திலும் பெளத்தத்தை எதுவும் செய்துவிட முடியாது. எனவே, பெளத்தத்துக்கு ஆபத்து என்ற மாயையான கருத்தியல்களில் இருந்து விடுபடுமாறும் சந்தேகங்களைக் கலையுமாறும் சிங்கள மக்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.


எனவே , இந்நாட்டின் இன ஒற்றுமையை பேணுவதற்கும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்கும் அனைத்து மதத் தலைமைகளும், சிவில் அமைப்புகளும், பேராசிரியர்களும், அரசியல் தலைமைகளும் ஓரணியில் திரளவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.


அதேபோன்று இன, மத அடிப்படையில் இல்லாது தேசியத்தைக் கருத்திற்கொண்டே கட்சிகள் அமைக்கப்படுதல் மிகமிக அவசியமாகும். இது எதிர்கால இலங்கைக்கும் சிறப்பாக அமையும் அந்த வகையில் அசாத் சாலியின் இந்த முன்னணி அமைத்திருப்பதையிட்டு அவரது எதிர்காலப்பணிகளுக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


இங்கு இறுதியாக உரையாற்றிய ஜனநா யக மக்கள் முன்னணியின் உப-தலைவரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி குமர குருபரன் கூறுகையில்,
திறமைமிக்கவரான அசாத் சாலியின் முயற்சிகள் வரவேற்கக் கூடியவையாக அமைந்திருக்கின்றன. சிறந்ததோர் பயணத்தினை ஆரம்பித்துள்ள அசாத் சாலியின் பணிகள் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts